எளியவர் கையில் தவழும் ஆண்டிராய்ட் போன் போன்றவர் முதல்வர் - அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்

News18 Tamil
Updated: July 11, 2019, 7:22 AM IST
எளியவர் கையில் தவழும் ஆண்டிராய்ட் போன் போன்றவர் முதல்வர் - அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்
.
News18 Tamil
Updated: July 11, 2019, 7:22 AM IST
எளியவர்கள் கையில் தவழும் ஆண்ராய்ட் போனை போன்றவர் முதல்வர் என்று அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல; எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று தெரிவித்தார். இந்த ஆட்சி கலையும் என்று கூறிவர்களுக்கு , லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதல்வர் என்று தெரிவித்தார்.

ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்ட் சிறந்ததாக இருக்க வேண்டும் அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் அவர் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்று இன்பதுரை தெரிவித்தார்.

Also Watch:
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...