சைகை மொழியில் ’வீடியோ கால்’ பேசும் மாற்றுத்திறனாளி...! நெகிழவைக்கும் வீடியோ

சைகை மொழியில் ’வீடியோ கால்’ பேசும் மாற்றுத்திறனாளி...! நெகிழவைக்கும் வீடியோ
News18
  • News18
  • Last Updated: December 29, 2019, 9:00 AM IST
  • Share this:
மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் செல்போனில் வீடியோ கால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

உலகின் எந்தப்பகுதியில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது.

நவீன வகை செல்போன்கள் இந்த குறையை தீர்த்து வைத்துள்ளன. இந்நிலையில், பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், வீடியோ கால் மூலம் வேறொருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
மேலும் ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்