எதற்காக இப்படி நடிக்கிறது இந்த நாய்...! வைரலாகும் வீடியோ

கால்களில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று கால்நடை மருத்துவரை அனுகியதிலும் பாதிப்புகள் இல்லை என உறுதியாகியுள்ளது.

news18
Updated: August 31, 2019, 2:35 PM IST
எதற்காக இப்படி நடிக்கிறது இந்த நாய்...! வைரலாகும் வீடியோ
வைரல் நாய்
news18
Updated: August 31, 2019, 2:35 PM IST
தாய்லாந்தில் நாய் ஒன்று வித்யாசமாக முறையில் நடந்து உணவு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தாய்லந்து நாட்டில் பாங்காக்கில் தெருநாயை அங்கு வசிக்கும் மக்கள் கயி என்ற பெயரில் செல்லமாக வளர்த்து வருகின்றனர். அந்த நாய் யாராவது தன்னைக் கடந்து சென்றால் அவர்களை ஏமாற்ற தனது பின்பக்க வலது கால் உடைந்ததைப் போன்று தரையில் தேய்த்துக் கொண்டே நடக்கிறது. அவர்கள் இரக்கப்பட்டு நிற்கும்போது சட்டென இயல்பு நிலைக்கு திரும்பி நடக்க ஆரம்பித்துவிடுகிறது.

“இந்த நாய் நான் வேலை பார்க்கும் இடத்தில் உள்ளது. சில வருடங்களாகவே அதை கவனித்து வருகிறேன். மக்களை தன் பக்கம் ஈர்க்க இந்த செயலை செய்யும்” என அங்கு வேலை பார்க்கும் நபர் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் உணவுக்காகத்தான் இப்படி செய்கிறதோ என உணவுகளை அளித்தாலும் அது இன்று வரை அப்படித்தான் செய்து கொண்டிருப்பதாக வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அது ஊட்டி விடவும், கொஞ்சி இரக்கம் காட்ட அவ்வாறு செய்யலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

கால்களில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று கால்நடை மருத்துவரை அனுகியதிலும் பாதிப்புகள் இல்லை என உறுதியாகியுள்ளது. என்ன செய்தாலும் மக்களை தன் பக்கம் ஈர்க்க இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பார்க்க...

ஒரு கையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தும் இளைஞர் 
First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...