முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ரசாயனம் எதுவும் இன்றி வருட கணக்கில் பாதுகாத்து வைக்கப்படும் திராட்சைகள் - எப்படி சாத்தியம்!

ரசாயனம் எதுவும் இன்றி வருட கணக்கில் பாதுகாத்து வைக்கப்படும் திராட்சைகள் - எப்படி சாத்தியம்!

காட்சி படம்

காட்சி படம்

ஆப்கானிஸ்தானில் ஒரு வகை களிமண்ணுக்குள் திராட்சையை வைத்து வெகுநாட்களுக்கு பாதுகாக்கின்றனர்.

  • Last Updated :

நாம் பழக்கடைகளில் வாங்கும் பல பழங்கள் என்றோ அறுவடை செய்யப்பட்டவை தான். ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்கள், அறுவடை காலங்களில் அதிகமாக கொள்முதல் செய்து கூலிங் ஸ்டோரேஜில் வைக்கப்படுகின்றன. அதற்குப் பிறகு, அந்த பழங்களுக்கான சீசன் முடிந்த சமயங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இது நம் எல்லோருக்கு தெரிந்த, அறிவியல் பூர்வமான பாதுகாப்பு முறை தான். ஆனால், ரசாயனம் அல்லது கூலிங் ஸ்டோரேஜ் பயன்பாடு இல்லாமல் திராட்சைப் பழங்களை பாதுகாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் இயற்கை முறையில் என்றால் உண்மையிலேயே சாத்தியம் தானா என்ற கேள்வி எழுகிறது அல்ல.

ஆம், ஆப்கானிஸ்தானில் ஒரு வகை களிமண்ணுக்குள் திராட்சையை வைத்து வெகுநாட்களுக்கு பாதுகாக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் சௌத் பைசல் மாலிக் என்ற வியாபாரி, களி மண் கட்டமைப்பை உடைத்து, திராட்சையை எடுக்கிறார்.’

இதுகுறித்து டுவிட்டர் யூசர் வெளியிட்டுள்ள பதிவில், “திராட்சை பாதுகாப்பு முறை என்பது ஆப்கானிஸ்தானில் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. களிமண் உள்ளே வைக்கப்படும் திராட்சைப் பழங்கள் ஓராண்டு வரையில், சில சமயம் ஓராண்டுக்கும் மேல் பாதுகாப்பாக இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு இட்லி போலவே களிமண் பெட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை வியாபாரி தரையில் எடுத்து வைத்து, மெல்ல தட்டி சாதாரண மூடி போல திறக்கிறார். அதனுள்ளே எந்த சேதாரமும் இல்லாமல் திராட்சைப் பழங்கள் இருக்கின்றன.

also read : மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வைரலாகும் வீடியோ :

டிவிட்டரில் கடந்த 17ம் தேதி வெளியான இந்த வீடியோவை சுமார் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இந்த பாரம்பரிய பாதுகாப்பு முறை குறித்து பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, களிமண் பாதுகாப்பு முறையை எப்படி செய்ய வேண்டும், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்புவதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் செல்ல விரும்புவதாக பதிவாளர் ஒருவர் கூறியுள்ளார்.

also read : இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

செயற்கை முறையில் பழங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் வர கூடும் என்றும், ஆனால், இயற்கையான முறையில் எந்தவித ஆபத்தும் இருக்காது என்றும் நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.

நூற்றாண்டு பாரம்பரியம் :

களிமண் உணவு பாதுகாப்பு பெட்டகம் என்பது நூற்றாண்டு பாரம்பரியம் மிகுந்தது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் திராட்சை தோட்டங்கள் மற்றும் பனி படர்ந்த மலைப் பகுதிகள் சூழ்ந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்த தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக, பாதுகாத்து வைத்துக் கொள்ளும் திராட்சைப் பழங்களை, சீசன் அல்லாத காலங்களில் பயன்படுத்தி கொள்கின்றனர்.

First published:

Tags: Viral Video