உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
என்பார் திருவள்ளுவர். ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு என்பதே இந்த குறளின் அர்த்தம்
அப்படி தகுந்த நேரத்தில் தங்கள் தோழியின் திருமணத்தை நிறுத்தி பள்ளிக்கு கூட்டி வந்த மாணவர்களின் ஒரு சுவாரசிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது.
மேற்கு பெண்கள் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் கோலாரில் உள்ள கோலார் சுசீலா மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், கடந்த ஒரு வாரமாக தங்கள் வகுப்புத் தோழி பள்ளிக்கு வராததை கவனித்துள்ளனர்.
நிதிப் பிரச்சனை காரணமாக சிறுமியின் குடும்பம் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதோடு அந்த மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருப்பதும் தெரிந்துள்ளது.
இதையும் படிங்க : அப்பப்பா..! வெதர் முதல் ஸ்விம்மிங் வரை.. இவ்வளவு விஷயம் இருக்கா ரஃபேல் வாட்சுல?
அந்த திருமணத்தில் அந்த மாணவிக்கு விருப்பம் இல்லை என்பதும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் , மாணவர்கள் மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்து, அவளை மீண்டும் பள்ளிக்கு அனுமதிக்குமாறு கோரினர். பிரச்சனையை உணர்ந்த பெண்ணின் குடும்பத்தினர், பின்வாசல் வழியாக மாப்பிள்ளை வீட்டிற்கு ரகசியமாக அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த மாணவர்கள் மணமகன் வீட்டுக்குச் சென்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டல் விடுத்தனர். சிக்கலைத் தவிர்க்கும் முயற்சியில், மணமகனின் குடும்பத்தினர் அவளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் சக மாணவர்கள் மனைவியை மீண்டும் தங்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சந்திர பாடியா மாணவர்களைப் பாராட்டி, அவர்களின் உறுதியால்தான் திருமணம் தவிர்க்கப்பட்டது என்ரூ பாராட்டியுள்ளார். பள்ளி அமைந்துள்ள கேஷ்பூர் தொகுதியின் தொகுதி மேம்பாட்டு அதிகாரி தீபக் குமார் கோஷ் கூறுகையில், அவளுக்கு 18 வயதாகும் முன் திருமணம் செய்ய மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child marriage, Kolkatta, Minor girl