உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் புத்தாண்டு விருந்தின்போது சில ஆண்கள் பெண்களுடன் செல்பி எடுக்க வற்புறுத்தியதால் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
புத்தாண்டு தொடங்கிய நேற்று இரவு நொய்டாவில் உள்ள கவுர் சிட்டி ஃபர்ஸ்ட் அவென்யூ சொசைட்டியில் வசிக்கும் அஜித் குமார், தனது மனைவி மற்றும் அவரது நண்பரின் மனைவியுடன் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
இதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, குமார் அவரானது நண்பர் ரித்தீஷையும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். இந்த தகராறில் தலையிட்டு அவர்களை தடுக்க முயன்ற சிலரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனால் வாக்குவாதம் , சண்டை என்று பிரச்சனை பெரிதானது. உடனே காவல்துறையை அழைத்துள்ளனர். சண்டைக்கு காரணமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சண்டையில் சில குடியிருப்புவாசிகள் மற்றும் பாதுகாவலர்களும் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year, Uttar pradesh