முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / திருமண செலவை மிச்சம் செய்து 20 குழந்தைகள் படிப்பு உதவிய 'ஆபீசர்ஸ் ஜோடி'.. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு

திருமண செலவை மிச்சம் செய்து 20 குழந்தைகள் படிப்பு உதவிய 'ஆபீசர்ஸ் ஜோடி'.. புதுமண தம்பதிக்கு குவியும் பாராட்டு

தம்பதி சிவம் தியாகி - ஆர்யா நாயர்

தம்பதி சிவம் தியாகி - ஆர்யா நாயர்

கேரளாவில் ஐஏஎஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணியில் உயர் அலுவலர்களாக பணிபுரியும் ஒரு ஜோடி ஆடம்பரத் திருமணத்தை தவிர்த்து அதில் மிச்சமாகும் பணத்தை 20 குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

திருமணம் என்றாலே ஆடம்பரமான முறையில் தடபுடலான ஏற்பாடுகளை செய்து லட்சக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் காலம் இது. சாமானிய மக்கள் கூட கவுரப் பிரச்சனையாகக் கருதி கடன் வாங்கிக் கூட திருமணத்திற்கு செலவு செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஐஏஎஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணியில் உயர் அலுவலர்களாக பணிபுரியும் ஒரு ஜோடி ஆடம்பரத் திருமணத்தை தவிர்த்து அதில் மிச்சமாகும் பணத்தை சமூக தொண்டுக்கு வழங்கி பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த சிவம் தியாகி 2020ஆம் ஆண்டில் இந்தியன் போஸ்டல் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அகமதாபாத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல, கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஆர்யா நாயர் என்ற பெண் இந்திய குடிமை பணி தேர்வில் வெற்றி 2021இல் ஐஆர்எஸ் அதிகாரியாக பணியேற்றார்.இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், மணப்பெண் ஆர்யா தனது திருமணத்தை மிக எளிமையாக நடத்த வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்துகொண்டு அதை பெற்றோரிடம் வெளிப்படுத்தினார்.

திருமணத்தை வீட்டிலேயே எளிய முறையில் செய்துகொண்டு பதிவு செய்துகொள்ளலாம். திருமணத்தில் மிச்சமாகும் பணத்தை 20 குழந்தைகளை படிக்க வைக்க செலவிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக நமது சமூகத்தில் திருமணத்திற்கென இரண்டு மூன்று நாள்கள் ஒதுக்கி தாம்தூம் என செய்வதே வழக்கம். அப்படி இருக்க, எளிய திருமணம் என்ற யோசனையை மணமகன் சிவம் முதலில் கேட்ட போது ஷாக் ஆகியுள்ளார்.

பின்னர் பெண்ணின் உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொண்டு, தனது குடும்பத்தாரிடம் எடுத்துரைத்துள்ளார். மணப்பெண்ணும் இதை தனது வீட்டில் கூறவே, இரு வீட்டாரும் ஒருவழியாக யோசனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், வீட்டில் சிறிய வரவேற்பு விழாவை இந்த தம்பதி வைத்துள்ளனர்.

தொடர்ந்து திருமணம வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த புதுமண தம்பதி தாங்கள் வாக்களித்தபடி 20 குழந்தைகளுக்கு கல்வி செலவை ஏற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு அவரது உற்றார் உறவினர்கள் இடமிருந்து மட்டுமல்லாது, சமூக வலைத்தளத்திலும் பலரும் பாராட்டுகள் குவித்து வருகிறது.

First published:

Tags: Marriage, Marriage Plan, Wedding plans