நகர முடியாமல் அவதிபட்ட கொழுக் மொழுக் குண்டு ஆந்தை !

நகர முடியாமல் அவதிபட்ட கொழுக் மொழுக் குண்டு ஆந்தை !
Chubby owl
  • Share this:
இங்கிலாந்தில் உள்ள ஸஃபோக் ஆந்தைகள் சரணாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 245 கிராம் எடை கொண்ட ஆந்தை ஒன்று நகரவே முடியாமல் அவதியுற்று பின்னர் உடல் எடை குறைத்து வானில் பறந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஸஃபோக் ஆந்தைகள் சரணாலயத்தில் ஆந்தை ஒன்று 3 மாதமாக பறக்கவில்லை. இதனால் குழப்பம் அடைந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் ஆந்தை இருந்ததை கண்டு குழம்பி போய் இருந்தனர்.

ஆந்தைக்கு என்ன ஆயிற்று என குழப்பத்தில் ஆழ்ந்த அதிகாரிகள் ஆந்தை இருந்த இடத்தின் அருகே அதிகமாக எலிகள் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர். பின்னர் ஆந்தையும் கொழுக் மொழுக் என குண்டாக இருக்க சந்தேகம் அடைய ஆந்தையின் உடல் எடையை பரிசோதித்துள்ளனர்.


பரிசோதனையில் ஆந்தை 245 கிராம் எடையுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகப்படியான எலிகளை ஆந்தை உட்கொண்டதால்  நகர முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், ஆந்தை பல நாட்களாக பறக்காமல் இருந்ததால் அதன் உடலில் காயம் ஏதேனும் இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அதன் உடல் எடையை பரிசோதித்ததில் 245 கிராம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. அதிகப்படியான எலியை உட்கொண்டதால் ஆந்தை உடல் பருமன் அடைந்துள்ளது .

தற்போது அதிகப்படியான டயட் கண்ட்ரோலுக்கு பிறகு ஆந்தையின் உடலை சீராகியுள்ளது என பதிவிட்டு ஆந்தை மீண்டும் பறந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading