சூப்பர் ஸ்டார் பட வசனத்தை பேசிக் காட்டிய 'ஹாலிவுட் தோர்'... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் பட வசனத்தை பேசிக் காட்டிய 'ஹாலிவுட் தோர்'... இணையத்தில் வைரலாகும் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: February 25, 2020, 10:37 PM IST
  • Share this:
தோர் கதாநாயகனான ஹாலிவுட் பிரபலம் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக் கானின் பட வசனத்தை பேசும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹாலிவுட்டின் தோர் என்னும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் மிகவும் பிரபலம். பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளில் ஒன்றுதான் தோர். அவர்களின் அவெஞ்சர்ஸ் தொடரிலும் இந்த கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். தோர் கதாபாத்திரத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்’  நடித்திருப்பார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இவர் அடுத்ததாக ‘நெட் பிளிக்ஸ்’ தளத்திற்காக ‘எக்ஸ்ட்ராக்ஷன்’ என்னும் இணைய தொடரில் நடித்து வருகிறார். இதில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் நடித்து வருகிறார்கள். இந்த தொடருக்கான படப்பிடிப்பின் போது இந்தியாவைச் சேர்ந்த நடிகரான ருத்ரேஷ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கலகலப்பாக கலந்துரையாடும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


அதில் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானின் பேர் சொல்லும், 1995-ல் வெளியான ’தில்வாலே துல்ஹானியா லேஜாயங்கே’ படத்திலிருந்து ஷாருக் கான் பேசிய,”பட் பட் ஷெஹ்ரன் மே அய்ஸி” எனத் தொடங்கும் பிரபலமான வசனத்தை ருத்ரேஷ் பேசிக் காட்ட அதைப் பின்தொடர்ந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்-ம் அதைப் பேசிக்காட்டுகிறார். இதை வீடியோவாக பதிவிட்ட ருத்ரேஷ் இணையத்தில் பதிவேற்ற அது தற்போது வைரலாகி வருகிறது.
தோர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஓரளவுக்கு சிறப்பாக இந்த வசனத்தை பேசியிருக்கிறார். அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று சிலாகிக்கும் நெட்டிசன்கள், இதை பாலிவுட் பாட்ஷா ‘ஷாருக் கான்’ பார்க்க வேண்டும் என்றும், இதற்கு அவருடைய பதில் என்னவாக இருக்கும் என்றும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading