ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாக்லேட்டை கொண்டு தொலைநோக்கி செய்த சமையல் கலை நிபுணர்... தீயாய் பரவும் வீடியோ!

சாக்லேட்டை கொண்டு தொலைநோக்கி செய்த சமையல் கலை நிபுணர்... தீயாய் பரவும் வீடியோ!

தீயாய் பரவும் வீடியோ!

தீயாய் பரவும் வீடியோ!

சாக்லேட்டுகள் மற்றும் மாவு பண்டங்கள் செய்வதில் வல்லவரான சமையல் கலை நிபுணர் ஒருவர், சாக்லேட்டை கொண்டு தொலைநோக்கியை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகி உள்ளதில் ஒரு முக்கிய நன்மை என்னவெனில், தங்களது தனிப்பட்ட திறமைகளை யார் வேண்டுமானாலும் வெளிக்காட்ட முடியும். சரியான திறமைகளுக்கு அதற்குரிய அங்கீகாரமும் வழங்குவதற்கு மக்கள் தவறுவதே இல்லை.அதிலும் இந்த செய்தியில் வரும் மனிதர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சாக்லேட்டை கொண்டு இந்த சாதனையை செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  அமவுரி என்ற பெயர் கொண்ட சமையல் கலை நிபுணர், ஒரு முழு தொலைநோக்கியை சாக்லேட்டை கொண்டு வடிவமைத்துள்ளார். தொலைநோக்கிய வடிவமைத்த பிறகு அதில் இன்னும் நேர்த்தியை சேர்ப்பதற்கு, அதற்கு மூன்று கால்கள் கொண்ட ட்ரைபாடையும் உருவாக்கி திட்டத்தட்ட உண்மையான ஒரு தொலைநோக்கி போல அதனை செய்துள்ளார்.

  தொலைநோக்கி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அதில் கண்ணாடி லென்சுகள் பயன்படுத்த வேண்டிய இடங்களில் எல்லாம் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் “சுகர் சீட்ஸ்” என்ற பொருளை பயன்படுத்தி ஒவ்வொன்றாக பொருத்தியுள்ளார். மேலும் தொலைநோக்கி செய்து முடித்தவுடன் உண்மையான தொலைநோக்கியை எப்படி நாம் நகர்த்தி சரி செய்து கொள்ள முடியுமோ அதே போன்று இதனையும் சரி செய்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளார்.

  Read More : ''ஹாய் சார்.. நான் தான் திருடன்’’ லேப்டாப் திருடிவிட்டு ஓனருக்கு மெயில் அனுப்பிய நபர்.. வைரல் போஸ்ட்!

   நவம்பர் 8ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் “சாக்லேட் டெலஸ்கோப்! பக்கத்து வீட்டுக்காரரை வேவுபார்க்க சிறந்த உணவு” என்ற வாசகங்களை இணைத்து ஷேர் செய்துள்ளார்.தற்போது வரை 70 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ள அந்த வீடியோ ஆறு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்ட இணையவாசிகள் பலரும் அவரது வீடியோவின் கீழ் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவர் தொலைநோக்கி உருவாக்கிய விதத்தையும் அவரது நேர்த்தியையும் பாராட்டி வருகின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Amaury Guichon (@amauryguichon)  “இந்த டெலஸ்கோப்பை கொண்டு கண்டுபிடிக்கும் வகையில் சாக்லேட் கிரகத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று ஒருவரும், “எனக்கு எதைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை உங்களது கற்பனையையா! அல்லது உங்களது பொறியியல் திறமையையா” என்று மற்றொருவரும் இவரது வடிவமைப்பு திறனையும் கலை நேர்த்தியையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

  மற்றொருவரும் “இது கிட்டத்தட்ட வில்லி வோங்கா கதையை போல் உள்ளது. வில்லி வோங்கா என்பது சார்லி அண்டு சாக்லேட் ஃபேக்டரி என்ற கதையில் வரும் ஒரு கதாபாத்திரமாகும். அதில் அந்த கதாபாத்திரத்திற்கு சொந்தமாக ஒரு சாக்லேட் தொழிற்சாலை இருக்கும்”என்று தனது ஆச்சரியம் கலந்து பாராட்டை அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chocolate, Trending, Viral