கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - ட்ரெண்டிங்கில் chiyaan 60 ஹேஷ்டேக்

நடிகர் விக்ரமின் அடுத்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் ட்விட்டரில் #Chiyaan60 என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் -  ட்ரெண்டிங்கில் chiyaan 60 ஹேஷ்டேக்
அப்டேட் எப்பங்க வரும்
  • Share this:
நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கே.ஜி.எப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.

இது ஒரு புறம் இருக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டுமென ட்விட்டரில் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இது தொடர்பாக ட்விட்டரில் #Chiyaan60 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் அப்டேட் எப்போது வரும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

       


 
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading