வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணைக் காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணைக் காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!
மாதிரி படம்
  • Share this:
சீனாவில் பல பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி உள்ளது.

சீனாவின் ஜிங்ஷான் நகரத்தில் இளம்பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் சீனாவில் முக்கிய தெருக்களில் கூட ஆள்நடமாட்டமின்றி காணப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் ஒருவன் இளம்பெண் தனியாக இருந்த வீட்டில் புகுந்துள்ளான். கொள்ளையடிக்க முயன்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளான்.


திருடன் செயலால் திகைப்படைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த கொள்ளையன் கழுத்தை நெறித்தும், வாயை மூடியும் உள்ளான். சட்டென்ற சுதாரித்து கொண்ட அந்த பெண் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்த திருடனிடம் கூறி உள்ளார். மேலும் பலமாக பல முறை இருமி உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் வீட்டில் தனியாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறி உள்ளார். இதை கேட்ட திருடன் பயந்து அலறி அடுத்து ஓடி உள்ளான். இதன்பின் அந்த பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் திருடனை கைது செய்துள்ளனர்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்