ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி - சீனாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு ஆப்பிள் ஜூஸ்

ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது எளிதாக இருந்தாலும் அதில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தெரிந்ததே. பலருக்கு செல்போன்களுக்கு பதிலாக பல்வேறு பொருட்கள் வந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது வழக்கமாகி விட்டது. இந்த சூழலில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ஆப்பிள் ஜூஸ் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக சுமார் $1,500, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,10,231-ஐ ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு டெலிவரி பார்சல் வந்த போது ஆப்பிள் ஜூஸ் இருந்ததால் லியு அதிர்ச்சியடைந்தார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது எளிதாக இருந்தாலும் அதில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தெரிந்ததே. பலருக்கு செல்போன்களுக்கு பதிலாக பல்வேறு பொருட்கள் வந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுவரை ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர் செய்யும் போது ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக செருப்பு, சோப்பு, செங்கற்கள் போன்றவை வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை என்றாலும், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக ஆர்டர், செய்த போது போனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் வந்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த லியு, இந்த வீடியோவை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் பதிவேற்றினார். இதனைத்தொடர்ந்து ஆப்பிள் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ் இதற்கு பொறுப்பு ஏற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Also read... பார்சலில் வந்த சிறுநீர்... அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் - மன்னிப்புகோரிய நிறுவனம்!

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் வந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரை திருட்டு எங்கு நடந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள தகவலின் படி, டெலிவரி செய்த நபர் ஐபோனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸை வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன்கள் திருடப்படுவது இது முதல்முறை அல்ல. 2018ம் ஆண்டில் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு ஆப்பிள் போன் பெட்டியில் நிரம்பிய ஒரு சோப் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் லியுவிற்கு நடந்த சம்பவம் போலன்றி இவர் தொலைபேசியை மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடமிருந்து ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நவம்பர் 2017ல், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு ஆப்பிள் போன் ஷோரூமில் சுமார் $370 மதிப்புள்ள ஐபோன் எக்ஸ் போன்களை கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: