இன்று காதலர்கள் ஒன்று சேர்வதை விட பிரிவதை தான் நம்மால் அதிகம் பார்க்க முடிகிறது. உருகி உருகி காதலித்தவர்கள் சில பெரிய கருத்து வேறுபாடு அல்லது காரணங்களால் பிரேக்கப் செய்து பிரிவது இயல்பு. சில நேரங்களில் இருவரும் மனது ஒன்றுபட்டு பிரிவார்கள்.
சில காதல்களில் ஒருவர் மட்டுமே பிரேக்கப் செய்வதில் பிடிவாதமாக இருந்து மற்றொருவரை விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இப்படி உறவுகளை முறித்து செல்வதற்கு விரக்தி, நேர்மையின்மை, ஏமாற்றுதல், கெட்ட பழக்கங்கள், நம்பிக்கையை காப்பாற்றாமல் போவது உள்ளிட்ட பல சரியான காரணங்கள் பின்னணியில் இருக்கும். ஆனால் சில காதல்களில் சின்ன விஷயங்களால் கூட பிரேக்கப் ஏற்படும்.
அப்படிப்பட்ட விசித்திரமான ஒரு காதல் பிரேக்கப் பற்றி தான் இங்கே நாம் பார்க்க போகிறோம். தன்னுடைய லவ் பார்ட்னர் வீட்டில் பிடித்தமான உணவு கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் பிரேக்கப் செய்வார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்புங்கள், இந்த சம்பவம் சீனாவில் அரங்கேறி இருக்கிறது. ஒரு பெண் தனது காதலனின் குடும்பத்தை முதன் முதலில் நேரில் சந்திக்க சென்ற போது, அந்த காதலனின் குடும்பத்தினர் பெண்ணுக்கு மிகவும் எளிய உணவை பரிமாறியதால், அந்த பெண் கடுப்பாகி குறிப்பிட்ட நபருடனான தனது காதலை பிரேக்கப் செய்துள்ளார்.
இந்த விஷயம் சர்வதேச அளவில் வைரலாகி இருக்கிறது. எப்படி தெரியுமா? நடந்த சம்பவத்தை பிரேக்கப் செய்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சோஷியல் மீடியாவில் பதிவிட்டதன் மூலம். ஆம், 2 நாட்கள் தான் காதலனின் வீட்டிற்கு சென்று தங்கிய போது எனக்கு பிடிக்காத அதே நேரம் மிக எளிய உணவுகளை மட்டுமே எனக்கு பரிமாறினர் என்று காதலனின் பெற்றோர் மீது குற்றம்சாட்டி தனக்கு வழங்கப்பட உணவுகளின் ஃபோட்டோவையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார். இந்த போஸ்ட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. இதனை தொடர்ந்தே இந்த வினோத பிரேக்கப் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அந்த பெண் கூறியிருப்பதாவது, நான் எனது பாய் ஃபிரெண்டின் பெற்றோரை சந்திக்க ஆவலுடன் இருந்தேன். அதேசமயம் பதற்றமாகவும் இருந்தேன். அவர்களை சந்தித்த பிறகு சாப்பிட என்னை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் உணவருந்த அமர்ந்த போது, அங்கே டேபிளில் ஏற்கனவே பரிமாறப்பட்ட எளிய உணவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். டேபிளில் வறுத்த முட்டைகளுடன் கூடிய நூடுல்ஸ் 1 கிண்ணம், பூசணி கஞ்சி மற்றும் சில வகை குளிர் உணவுகளை மட்டுமே வைத்திருந்தனர்.
பாய் ஃபிரெண்டின் பெற்றோர்கள் முதல் சந்திப்பிற்கு ஸ்பெஷல் உணவுகளை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுவையான உணவு இருக்கும் என நினைத்தேன். எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது என்று அவனுக்கு தெரியும், ஆனால் ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு நூடுல்ஸ் டிஷ் இருந்தது. இதை பற்றி நான் கேட்ட போது காதலன் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சாமானியர்கள் தினமும் இதை தான் சாப்பிடுவார்கள், என் வீட்டிலும் இதுவே கிடைக்கும் என்றான். இதனை தொடர்ந்து எனக்கு இந்த உறவு சரிப்பட்டு வராது என கூறி விட்டு, அவனது வீட்டிலிருந்து மூட்டை முடிச்சை கட்டி கொண்டு பிரேக்கப் செய்து கிளம்பி விட்டேன் என கூறி இருக்கிறார். சில நெட்டிசன்கள் குறிப்பிட்ட பெண்ணுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், பலர் திருமணத்திற்கு முன்பே அவர்களின் உணவுமுறை பற்றி தெரிந்து கொண்டது மிகவும் நல்ல விஷயம். இல்லை என்றால் பின்னாளில் பிரச்சனை பெரிதாகியிருக்கும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில் அவர்களில் யாரும் உங்களை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. குறிப்பாக உங்களை அந்த பெற்றோருக்கு பிடிக்கவில்லை போல என கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.