கரப்பான் பூச்சியை கொல்ல பற்ற வைத்த தீ... ஒரே நேரத்தில் மூன்று கார்கள் எரிந்து நாசம்...! வீடியோ

”கரப்பான் பூச்சி தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் இந்த விபரீதம்”

கரப்பான் பூச்சியை கொல்ல பற்ற வைத்த தீ... ஒரே நேரத்தில் மூன்று கார்கள் எரிந்து நாசம்...! வீடியோ
கரப்பான் பூச்சி
  • News18
  • Last Updated: November 9, 2019, 6:46 PM IST
  • Share this:
வீட்டில் கரப்பான் பூச்சியைக் கண்டால் அடிக்க முயல்வோம். சிலர் அதற்கு பயந்து ஓடுவார்கள். ஆனால் சீனாவை சேர்ந்த இந்த நபர் நெருப்பு கொண்டு கொளுத்தியுள்ளார். ஆனால் எரிந்ததோ அவருடைய மூன்று கார்கள்.

ஆம், சீனாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய கிட்சனில் கரப்பான் பூச்சி தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அன்று அந்தக் கரப்பான் பூச்சியைக் கண்ட நபர் கொந்தளித்து அதை எரித்துக் கொல்ல முற்பட்டுள்ளார். இதற்காக நெருப்பை உமிழும் லைட்டரைப் பயன்படுத்தியுள்ளார்.

கூடவே பூச்சிக்கொல்லி மருந்தையும் ஊற்றியுள்ளார். சொல்லவே வேண்டாம்... பூச்சிக் கொல்லி மருந்தும் எளிதில் பற்றக் கூடியது என்பதால் தீ மளமளவெனப் பற்றிக்கொண்டது. அந்தத் தீ வெளியே அடுத்தடுத்து நிறுத்தி வைத்திருந்த மூன்று கார்களிலும் பரவி எரிந்துவிட்டது.


இந்த சம்பவங்கள் வீடியோவாகவும் பதிந்துள்ளது. இதோ அந்த வீடியோ..!

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading