Home /News /trend /

இப்படிலாமா நடக்கும்.. பைன் விதைகளை பறிக்க சென்றவர் பலூனில் 320 கி.மீ பயணம் - 2 நாள்களுக்கு பின் மீட்பு

இப்படிலாமா நடக்கும்.. பைன் விதைகளை பறிக்க சென்றவர் பலூனில் 320 கி.மீ பயணம் - 2 நாள்களுக்கு பின் மீட்பு

 விதை பறிக்க சென்று பலூனோடு பறந்த சீனா நபர்

விதை பறிக்க சென்று பலூனோடு பறந்த சீனா நபர்

பலூனில் சிக்கி கொண்ட அந்த நபர், மீட்பு குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் தரையிறங்கினார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaChinaChinaChina
ஹைட்ரஜன் பலூனை பயன்படுத்தி மரங்களில் உள்ள பைன் விதைகளைப் பறித்துக் கொண்டிருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக அதே பலூனிலேயே 320 கிலோமீட்டர் பறந்து, இரண்டு நாட்கள் கழித்து உயிருடன் தரை இறங்கிய சுவாரசியமான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

வடகிழக்கு சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் என்ற மாகாணத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில்,  தன்னுடைய ஹைட்ரஜன் பலூனை பயன்படுத்தி பைன் மரங்களில் உள்ள பைன் விதைகளைச் சேகரிப்பது இவருடைய வழக்கம். அது போலவே இவரும் கூட்டாளியான மற்றொரு நபரும் அந்த பலூனில் இருந்துள்ளனர்.

வழக்கம் போல பலூனை தரையுடன் இணைத்து விட்டு பைன் விதைகளை இரண்டு பெரும் சேகரித்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த அந்த பலூன், தரையுடன் இருந்த பிணைப்பை அறுத்துக் கொண்டு வானில் பறக்கத் துவங்கியது. தரையிலிருந்து பலூன் கட்டுப்பாடின்றி பறப்பதைப் பார்த்து உடனேயே சுதாரித்துக் கொண்ட அந்த கூட்டாளி, துரிதமாகச் செயல்பட்டு பலூனில் இருந்து கீழே குதித்து எந்த வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார்.

அவருடைய கூட்டாளி கீழே குதித்துத் தப்பித்து விட இவர் மட்டும் அந்த பலூனிலே தன்னந்தனியாக வானத்தில் பறக்கத் துவங்கி விட்டார். அவ்வாறு அவர் பல கிலோமீட்டர்கள் வானத்திலேயே பறந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடன் செல்போனை வைத்திருந்தார். அடுத்த நாள் காலையில் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மீட்புக் குழுவினர் பலூனை எவ்வாறு தரை இறக்குவது என்பதைப் பற்றி அவருக்கு ஃபோனிலேயே விளக்கிக் கூறினர். இதற்கிடையில் அவர் ஏற்கனவே பல கிலோமீட்டர் தூரம் பலூனில் பறந்து கொண்டிருந்தார்.

மீட்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்ட அவர் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தரையிறங்கினார். அவ்வாறு தரையிறங்கும் போது அவர் கிட்டதட்ட 320 கிலோமீட்டர் தூரம் பலூனில் பறந்து இருந்தார். கீழே வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்ததினால் ஏற்பட்ட கால் வலியைத் தவிர வேறு ஏதும் மிகப்பெரிய உடல் கோளாறு ஏற்படவில்லை எனத் தெரிவித்தனர். இதைப்பற்றி முழு விவரத்தையும் அம்மாநில செய்தி நிறுவனமான சிசிடிவி வெளியிட்டுள்ளது.

Also Read : தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்..கண் இமைக்கும் நேரத்தில் ரயில்வே ஊழியர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..

இதைப் பற்றிப் பேசிய அந்த பகுதியில் உள்ள அதிகாரி ஒருவர், சம்பவத்தில் தொடர்புடைய அந்த மனிதர் தன்னுடைய முழு பெயரையும் குடும்ப விவரங்களையும் வெளியிட விரும்பவில்லை என்றும், அவருடைய குடும்பப் பெயர் ஃபு என்பது மட்டும் தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் அந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதைக் கடந்தவராக இருக்கலாம் என்றும் தற்போது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Published by:Janvi
First published:

Tags: China, Viral News

அடுத்த செய்தி