• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அமெரிக்க போர் விமானங்களுடன் ஊஞ்சல் ஆடிய தலிபான்கள்... சீன அரசு அதிகாரி வெளியிட்ட வீடியோ

அமெரிக்க போர் விமானங்களுடன் ஊஞ்சல் ஆடிய தலிபான்கள்... சீன அரசு அதிகாரி வெளியிட்ட வீடியோ

 ஊஞ்சலில் ஆடிய  தலிபான்கள்

ஊஞ்சலில் ஆடிய தலிபான்கள்

சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தாலிபான்கள் அமெரிக்க போர் விமானங்களுடன் ஊஞ்சல் ஆடி மகிழும் வீடியோ வெளியாகி உள்ளது.

  • Share this:
    சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தாலிபான்கள் அமெரிக்க போர் விமானங்களுடன் ஊஞ்சல் ஆடி மகிழும் வீடியோ வெளியாகி உள்ளது.

    பல வருடங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு நிலவி வரும் நெருக்கடி நிலைகள் தொடர்பான பல்வேறு போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

    விமானத்தில் ஏற முயன்ற நூற்றுக்கணக்கான ஆப்கான் மக்கள் அடங்கிய வீடியோ காட்சி மற்றும் விமானம் பறக்க துவங்கிய பிறகு அதிலிருந்து இருவர் கீழே விழுந்த காட்சிகள் என நம் கண்களையும், மனதையும் விட்டு அகல மறுக்கும் நெஞ்சை உலுக்கும்  சம்பவங்கள் நிறைய இருக்கின்றன.

    எப்படியோ தாலிபான்களின் ஆட்சிப்பிடியில் சிக்காமல் தப்பி பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஆப்கான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாட்டிற்கு தப்பி சென்று வருகின்றனர்.

    பெல்ஜியம் ஏர்போர்ட்டில் துள்ளிக்குதித்த ஆப்கன் சிறுமி


    அப்படி நாட்டிலிருந்து தப்பி பெல்ஜியத்திற்கு சென்ற பிறகு விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு ஆப்கான் சிறுமி அந்நாட்டின் ஏர்போர்ட்டினுள் இருக்கும் தார் சாலையில் சாதாரணமாக நடந்து செல்லாமல், உற்சாகத்தில் தனது வயதிற்குரிய விளையாட்டுத்தனத்துடன் தாவி செல்லும் ஃபோட்டோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் தற்போது மற்றும் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது . செப்டம்பர் 9 அன்று, சீன அரசு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

     



     

    சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "பேரரசுகளின் போர் இயந்திரங்களை தாலிபான்கள் ஊஞ்சலாக பயன்படுத்துகின்றனர் என்று வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: