• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மனைவியின் சுமையை குறைக்க எடுத்த முடிவு - 2 வயது குழந்தையுடன் டெலிவரி வேலை பார்க்கும் சீன நபர்!

மனைவியின் சுமையை குறைக்க எடுத்த முடிவு - 2 வயது குழந்தையுடன் டெலிவரி வேலை பார்க்கும் சீன நபர்!

 2 வயது குழந்தையுடன் டெலிவரி வேலை பார்க்கும் நபர்

2 வயது குழந்தையுடன் டெலிவரி வேலை பார்க்கும் நபர்

சீனாவில் ஒரு டெலிவரி நபர் தனது பணி நேரத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் விதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் சாதாரண விஷயம் அல்ல. குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகளையும் கஷ்டங்களையும் நாம் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாது. அதிலும், கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் அதே சமயத்தில் தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவில் ஒரு டெலிவரி நபர் தனது பணி நேரத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் விதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த சீன டெலிவரி நபரின் பெயர் லி, இவர் 2 வயது பெண் குழந்தைக்கு தந்தை ஆவார்.

இவர் வேலைக்குச் செல்லும் போது தனது மகளை டெலிவரி பெட்டியில் வைத்துக்கொண்டு செல்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லி தனது மகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து தன்னுடனே டெலிவரிக்கு அழைத்துச் செல்கிறார். லி மற்றும் அவரது மனைவி இருவரும் சீனாவின் வெட் மார்க்கெட்டில் வேலை செய்வதால், அவர்கள் தங்கள் மகளை மாற்றி மாற்றி கவனித்து கொள்கின்றனர். லி தனது மகளை காலையில் கவனித்துக்கொள்கிறார். அதே நேரத்தில் அவரது மனைவி தனது குழந்தையுடன் தரமான நேரத்தை மாலையில் செலவிடுகிறார். இந்த தம்பதியினர் தங்கள் மகளை கவனித்துக் கொள்ளும் நேரத்தையும் வேலை செய்யும் நேரத்தையும் சமமாக பகிர்ந்து கொள்கின்றனர்.



குழந்தைக்கு 6 மாதங்கள் இருக்கும் போதே லி தனது மகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து டெலிவரி வேலையை செய்து வந்ததாக கூறியுள்ளார். அதுதொடர்பான புகைப்படங்கள் கூட வெளியாகி மிகவும் வைரலானது. ஆரம்பத்தில், அவர் சிறுமியை டெலிவரி பெட்டியில் உட்கார வைத்துள்ளார். அந்த பெட்டியில் ஒரு மென்மையான மெத்தை, ஒரு பால் பாட்டில் மற்றும் டயப்பர்களை வைத்திருந்தார். பயணங்களின் போது தனது மகள் எப்போதுமே அமைதியானவளாக நடந்து கொண்டாள் என்றும் அவளுடன் நான் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் ரசித்ததாகவும் லி தெரிவித்துள்ளார்.

Also read... சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடும் இளம் வயதினர் சைபர் அச்சுறுத்தலில் ஈடுபடலாம்: ஆய்வில் தகவல்!

டெலிவரி சமயங்களில் தனது மகள் எப்போதும் தன்னை சிரிக்க வைப்பதாகவும், பிஸியான நாட்களில் கூட அவரை ஊக்குவிப்பதாகவும் லி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். எல்லா கஷ்டங்களையும் தாங்குவது எங்களுக்கும், எங்கள் குழந்தைக்கும் மிகவும் எளிதல்ல என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது எல்லா துன்பங்களுக்கும் அவர் வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், பிரச்சினையைத் தணிக்க வேறு வழியில்லை நாங்கள் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லீயின் குடும்பம் ஒரு சிறிய வாடகை அறையில் வசித்து வருகின்றனர். அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஆனால் லீ மற்றும் அவரது மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சிக்கு நிறைய பணம் தேவையில்லை என்று கூறியுள்ளனர். தம்பதியினர் தங்கள் சிறிய மகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த விரும்புவதாகவும், அதற்காகவே கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: