சுமார் 2 மீட்டர் அளவிற்கு 61 மில்லியன் யுவான் அதாவது இந்திய பணமதிப்புப் படி ரூ. 73 கோடி பணநோட்டுகளை அடுக்கி வைத்து பார்ட்டி கொண்டாடிய நிறுவனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் கிரேன் தயாரிக்கும் நிறுவனமான ஹெனான் மைன் என்ற கம்பெனி 2022 இல் அடைந்த லாபத்தைக் கொண்டாடும் வகையில் திறமையாகச் செயல்பட்ட ஊழியர்களுக்கு பார்ட்டி கொடுத்து சுமார் 73 கோடி மதிப்பிலான பண நோட்டுகளை போனஸ் ஆக வழங்கியுள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கில் தான் போனஸ் பணத்தைச் செலுத்துவர். இங்கு வித்தியாசமாக ஊழியர்களுக்குக் கொடுக்க வைத்த போனஸ் பணத்தைப் பிரமிடு போல் அடுக்கி அதில் ஒரு நபருக்கு 1 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.1,20,91,847 கோடி போனஸ் ஆக வழங்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் குறிப்பிட்ட தகவலின் படி, வெற்றிகரமாக நிறுவனத்தில் உயர்வுக்கு உழைத்த 40 சேல்ஸ் மேனேஜர்களுக்கு அந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஊழியர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் (ரூ.6,04,60,138 ) போனஸ் ஆக வழங்கப்பட்டுள்ளது.
இது இல்லாமல் சுமார் ஊழியர்களுக்குப் பணத்தை வேகமாக எண்ணும் போட்டி வைக்கப்பட்டு பண நோட்டுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஹெனான் மைன் நிறுவனம் 380 அலுவலகங்களில் 2,700 பணியாளர்களைக் கொண்டு செயல்படுகின்றனர். 2022 ஆம் ஆண்டு சீனா கண்ட கடும் பொருளாதார நெருக்கடியிலும் இந்த நிறுவனம் 2.3 பில்லியன் அளவு வருவாய் ஈட்டியுள்ளது.
இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் இந்தியா உட்பட ஆஸ்ரேலியா, வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா,பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மால்டா, துர்க்மெனிஸ்தான், சவுதி அரேபியா, பெரு மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cash bag, China, Trending Video, Viral Video