ஊழியர்களை மேடையேற்றி பாதங்களை கழுவிய முதலாளி...! என்ன காரணம் தெரியுமா..?

லாபத்தை ஈட்டியதால் அவர்களின் பாதங்களை கழுவி நன்றி கூறியுள்ளார் நிறுவன மேலாளர்.

ஊழியர்களை மேடையேற்றி பாதங்களை கழுவிய முதலாளி...! என்ன காரணம் தெரியுமா..?
ஊழியர்களை மேடையேற்றி பாதங்களை கழுவிய முதலாளி
  • News18
  • Last Updated: November 9, 2019, 6:49 PM IST
  • Share this:
பாதங்களைக் கழுவி மரியாதை செலுத்துவது என்பது இந்தியர்களுக்குப் புதிதல்ல. உதாரணமாக திருமணத்தின்போதும் பெற்றோர்களின் பாதங்களை கழுவி வணங்குவதை பலர் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

ஆனால், சீனாவில் தன்னுடைய நிறுவன ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி லாபத்தை ஈட்டியதால் அவர்களின் பாதங்களை கழுவி நன்றி கூறியுள்ளார் நிறுவன மேலாளர்.

சீனாவின் காஸ்மெடிக் நிறுவனம் சேல்ஸ் ஊழியர்களில் கடுமையாக உழைத்த ஊழியர்களை மேடையின் அமர வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மண்டியிட்டு ஒவ்வொருவரின் ஷூவையும் கழற்றி அவர்களின் பாதங்களை கழுவுகிறார்.


இந்நிகழ்ச்சி நிறுவனத்தின் விருது நிகழ்ச்சியின்போது நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்