Home /News /trend /

காதலியின் பணத்தை திருட காதலன் செய்த வேலைய பாருங்க..

காதலியின் பணத்தை திருட காதலன் செய்த வேலைய பாருங்க..

காட்சி படம்

காட்சி படம்

China Man Jailed for Lifting Ex girlfriends Eyelids : காதலியிடமிருந்து வித்தியாசமான முறையில் பணத்தை திருடிய காதலன்..

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன் யூஸர்களுக்கு முக அங்கீகாரம் (facial recognition) ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த அம்சம் உடனடி ஃபோன் அணுகல் மற்றும் அதில் உள்ள பல சேவைகளை யூஸர்களுக்கு வழங்குகிறது. இருப்பினும் ஒரு சில நேரங்களில் இது சொந்த குறைபாடுகளுடன் வருகிறது. இத்தகைய ஒரு குறைபாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணமாக, ஃபேஸ் ஐடியை (Face ID) பயன்படுத்தி சீனாவில் ஒரு நபர் தனது காதலியின் (முன்னாள்) அக்கவுண்ட்டில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை எப்படி திருடி உள்ளார் என்பதை காட்டுகிறது.

இது தொடர்பாக தி டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. தி டைம்ஸில் வெளியாகி இருக்கும் அறிக்கையின் படி, தனது காதலியிடம் (முன்னாள்) 23,500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 லட்சம் மோசடி செய்த சீன நபர் ஒருவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள நபர் நாம் முன்பு பார்த்த facial recognition அம்சத்தை தவறாக பயன்படுத்தி தான் முன்னாள் காதலியிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை சுருட்டி உள்ளார்.

Also Read : மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

கடந்த ஆண்டு டிசம்பரில் ஹுவாங் என்ற அந்த 28 வயது இளைஞர் தனது முன்னாள் காதலியுடன் அபார்ட்மெண்டில் தூங்கிய கொண்டிருந்த போது முதலில் அவரது கைரேகையை பயன்படுத்தி அவரது ஃபோனை ஓபன் செய்ய முயன்றுள்ளார். இந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் அந்த இளம்பெண் தனது ஃபோனில் பேமெண்ட் ஆப்ஸ்களை அன்லாக் செய்ய facial recognition அம்சத்தை ஆக்டிவேட் செய்து இருக்கிறார். இதனை பார்த்த அந்த இளைஞர் எப்படியாவது அதனை ஓபன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

also read : ஒரே நாளில் 10 முறை கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டுள்ள நபர்... அதிகாரிகள் விசாரணை!

இதற்காக பாதிக்கப்பட்ட பெண் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது ஃபோனில் அவருக்கே தெரியாமல் அவரது முக அடையாளத்தை ஸ்கேன் செய்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, முக அங்கீகாரத்தை செயல்படுத்துவதற்காக குற்றவாளி பாதிக்கப்பட்டவரின் கண் இமைகளை மேலே இழுத்து உயர்த்தி உள்ளார். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த ஸ்மார்ட் ஃபோனில் இருந்து பேமெண்ட் ஆப்ஸ்கள் அன்லாக் ஆகி இருக்கிறது. பின்னர் குறிப்பிட்ட இளம்பெண்ணின் பேங்க் அக்கவுண்ட்டை Alipay account மூலம் அணுகி, தன்னுடைய அக்கவுண்டிற்கு லட்சக்கணக்கான ருபாய் மதிப்பிலான பணத்தை மாற்றி விட்டு எதுவும் தெரியாது போல மீண்டும் காதலியின் பக்கத்திலேயே ஃபோனை வைத்து விட்டார்.

அக்கவுண்ட்டில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதை கண்ட அந்த இளம்பெண் போலீசில் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து யாருடைய அக்கவுட்ண்டிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என்று பார்த்த போது வசமாக சிக்கி கொண்டார் அந்த பெண்ணின் காதலரான 28 வயது இளைஞர். தெற்கு நகரான நானிங்கில் உள்ள மாவட்ட மக்கள் நீதிமன்றத்திற்கு சென்ற இந்த வழக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: China

அடுத்த செய்தி