• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி ... இணையவாசிகளை கவர்ந்திழுக்கும் வீடியோ

சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி ... இணையவாசிகளை கவர்ந்திழுக்கும் வீடியோ

சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி

சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி

சிம்பன்சி ஒன்று மஞ்சள் நிற டி-ஷர்ட்டை சோப்பு போட்டு துவைத்து நீரோடையில் அலசும் வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

  • Share this:
    சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது.

    இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன.

    சிம்பன்சிகள் மிகவும் அறிவார்ந்த விலங்குகள். மிக விரைவாக மனிதர்கள் செய்யும் செயல்களை பின்பற்றி வாழும். தற்போது சிம்பன்சி ஒன்று மனிதனைப் போல் துணி துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று நீரோடையில் தனது துணிகளை துவைக்கின்றது. மஞ்சள் நிற டி-ஷர்ட்டை சோப்பு போட்டு துவைத்து நீரோடையில் அலசும் வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

     

     



     




    View this post on Instagram





     

    A post shared by Sachin Sharma (@helicopter_yatra_)






     

     

    இந்த வீடியோ 95,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் வைரலாகி வருகின்றது. பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிம்பன்சி எப்படி துணி துவைக்க முடியும் எனவும் அதற்க்கு துவைக்கும் படி கற்றுக்கொடுத்தது யார் எனவும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    இதே போன்று சமீபத்தில் நாய் ஒன்று கேக் தயார் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் நாய் செப் அணிந்திருக்கும் தொப்பியினை அணிந்து கேக் செய்துள்ளது.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Sachin Sharma (@helicopter_yatra_)






     

    அதுவும் கேக்கை அசால்ட்டாக செய்கிறது. இந்த வீடியோவை பார்த்து நாம் கூட கேக் எளிதாக கற்றுக்கொள்ளலாம் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு எளிமையாக இந்த நாய் வாழைப்பழ பாம்கேக்கை செய்கிறது. இந்த வைரல் வீடியோவை இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by N U G G E T 🥔 (@nuggetkoh)






    இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு நாய் கேக் தயாரிப்பது வித்தியாசமானது” என்றும், கேக்கை இவரிடமே கற்றுக்கொள்ளலாம் என்றும், இன்னும் சிலரோ நாய் செய்த கேக்கை சாப்பிடுவது இன்னும் வேடிக்கையானது என்றும் கிண்டலாக கமெண்ட்ஸ் பதிவிட்டு இருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: