’சிம்பான்சி’ குரங்கு உடன் சினிமா படம் பார்க்கலாமா!

மனிதர்களைப் போல் படத்தைப் பார்த்துவிட்டு சிரிப்பு , அழுகை என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

news18
Updated: July 23, 2019, 1:49 PM IST
’சிம்பான்சி’ குரங்கு உடன் சினிமா படம் பார்க்கலாமா!
சிம்பான்சி குரங்குகள்
news18
Updated: July 23, 2019, 1:49 PM IST
மனிதர்களைப் போல் சிம்பான்சி குரங்குகளும் சினிமா படம் பார்க்க விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதுமட்டுமன்றி மனிதர்களைப் போல் படத்தைப் பார்த்துவிட்டு சிரிப்பு , அழுகை என எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மனிதர்களுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் இடையில் மிகப்பெரும் தொடர்பு இருப்பதை உணர்த்துவதுவதாகவும் கூறுகின்றனர்.

மனிதர்கள் மற்றவர்களுடன் தொடர்பை உருவாக்க மிகப்பெரும் பலமே உணர்ச்சிகள்தான். மனதில் நினைப்பதை செயலாக்குவதுதான் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். ஆனால் அதை தற்போது மனிதக் குரங்குகளும் செய்கின்றன என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அவை படம் பார்க்கும், வீடியோ கேம் விளையாடும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை ராயல் சொசைட்டி பி என்னும் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இரண்டு சிம்பாசிகளுக்கு குறைந்த அளவிலான வீடியோவை பிளே செய்து காண்பித்துள்ளனர். அவை அந்த வீடியோவிற்கு மனிதரை விட விரைவில் உணர்ச்சியை ( react) வெளிப்படுத்தி தனது பார்ட்னருடன் மகிழ்வதைக் கண்டுள்ளனர்.

அவை இரண்டும் மாறி மாறி ஒத்துழைப்பு அளித்து வீடியோவைக் கண்டு களித்துள்ளன. இதைக் கண்ட ஆராய்ச்சியாளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மனிதர்களை விட சிம்பான்சிகள் விரைவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்ட பிறகு இன்னும் அவை மனிதர்களைப் போல் என்னென்ன செயல்களைச் செய்யும் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...