முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பல மாதத்திற்கு பின் வீடு திரும்பிய ராணுவ வீரர்... குழந்தையை சந்திக்கும் உணர்ச்சிப் பூர்வமான வைரல் வீடியோ!

பல மாதத்திற்கு பின் வீடு திரும்பிய ராணுவ வீரர்... குழந்தையை சந்திக்கும் உணர்ச்சிப் பூர்வமான வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | ராணுவ வீரர் ஒருவர் பல காலத்திற்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். அவர் தனது மகனிற்கு பெரிய சப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு ஏற்பாட்டை செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

  • Last Updated :

ராணுவத்தில் பணிபுரிய கூடியவர்கள் எல்லோரும் தங்களது வீட்டிற்கு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வந்து செல்ல முடியும். இதுகுறித்து பல திரைப்படங்களில் நாம் கண்கூட பார்த்திருப்போம். ராணுவத்தில் இருந்து வருகிறார்கள் என்றதும் அவர்களின் வீடுகளில் பலவித ஏற்பாடுகளை செய்வார்கள். அதே போன்று அவர்களின் பெற்றோர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் ஆவலுடன் இந்த நாளுக்காக காத்திருப்பார்கள். ராணுவத்தில் இருந்து வந்த உடன் அவர்களின் நீண்ட நாள் பாசத்தை மடை திறந்த வெள்ளம் போல காட்டி விடுவார்கள்.

இப்படியொரு நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ வீரர் ஒருவர் பல காலத்திற்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். அவர் தனது மகனுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு ஏற்பாட்டை செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில், ராணுவ வீரரின் மகன் குத்து சண்டை பயிற்சியில் இருப்பது போன்று தொடங்கி உள்ளது. அதன் பிறகு அவரது தந்தையான ராணுவ வீரர் அவரது மகனுக்கு எதிராக குத்து சண்டையில் ஈடுபடுகிறார். இதில், வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்த பயிற்சியில் அவரது மகனின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஏற்பாட்டை செய்துள்ளார்.

அதன் பிறகு இருவரும் விளையாட்டாக குத்து சண்டையில் ஈடுபடுகின்றனர். நடுவில் ராணுவ வீரர் குரல் கொடுக்கிறார், உடனே அது தனது அப்பா தான் என்பதை அந்த சிறுவன் கண்டுபிடித்து விடுகிறார். உடனே கண்களை கட்டி இருந்த துணியை கழட்டி விட்டு தனது அப்பாவை பார்த்து 'டேடி' என்று கத்தி கொண்டே கட்டு அணைக்கிறார். இந்த வீடியோவை யார் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வந்து விடும். அந்த அளவிற்கு பாசமிகுந்த உணர்வு பூர்வமான நிகழ்வாக இது இருந்துள்ளது.

இந்த வீடியோவை 'News 4 Nashville' என்கிற சேனல் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளது. இதுவரை 10.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவிற்கு ரீட்வீட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் "இது மிகவும் மனதைக் கவரும் மற்றும் முழு பிரபஞ்சத்தின் மிக அழகான உறவுகளில் ஒன்றின் சிறிய காட்சி! இதைப் பார்த்து கண்ணீர் வந்தது, எனக்கும் இப்படியொரு தருணம் அமைந்திருக்க வேண்டும்" என்று கமெண்ட் செய்துள்ளார்.

இது போன்று பலரும் தங்களது கருத்துக்களை இந்த ட்வீட்க்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை 15 ஆயிரம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Trending, Viral Video