ஆபாச தளங்களில் விதிகளை மீறி கொட்டி கிடக்கும் 'பாலியல் வன்முறை வீடியோக்கள்' - எச்சரிக்கும் ஆய்வு...!

மாதிரி படம்

பல வீடியோக்களில் போதைப்பொருட்களுடனோ அல்லது மிகவும் இளமையான தோற்றத்துடனோ உள்ள கேரக்டர்கள் இருப்பதாக குறிப்பிட்டு அதை பற்றி விவரிக்கப்பட்ட கிளிப்புகள் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டர்ஹாம் பல்கலைக்கழகம் (Durham University) நடத்திய ஒரு ஆய்வில், Pornhub உள்ளிட்ட பல ஆபாச தளங்களில் "பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் என்று சந்தேகிக்கப்படும் வீடியோக்கள்" ("suspected videos of sexual violence and abuse) வயது சரிபார்ப்பு சோதனை எதுவும் இன்றி குழந்தைகளுக்கு கூட வெளிப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பிரபல ஆபாச தளங்களில் இருக்கும் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் என்று சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கற்பழிப்பு செயல்களை அப்பட்டமாக குழந்தைகளுக்கு காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி இது போன்ற மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. Pornhub மற்றும் Xvideos ஆபாச தளங்களின் ஹோம் பேஜில் இருந்த சுமார் 1,31,738 வீடியோக்களை ஆராய்ச்சியாளர்கள் கவனத்தில் கொண்டனர். ஹோம் பேஜில் உள்ள 8 வீடியோக்களில் 1 பாலியல் வன்முறைச் செயலை கொண்டிருந்ததாகவும், அவை சம்மதமில்லா பாலியல் செயலை காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பல வீடியோக்களில் போதைப்பொருட்களுடனோ அல்லது மிகவும் இளமையான தோற்றத்துடனோ உள்ள கேரக்டர்கள் இருப்பதாக குறிப்பிட்டு அதை பற்றி விவரிக்கப்பட்ட கிளிப்புகள் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

கற்பழிப்பு ஆபாச வீடியோ வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது இங்கிலாந்தில் சட்டவிரோதமானது. ஆனால் இப்படிப்பட்ட பல வீடியோக்களுக்கு" காதலன் கேர்ள் பிரண்டை உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது" அல்லது " மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தப்பட்டது "என்ற தலைப்பில் இருந்தது. மேலும் பிரபல ஆபாச தளங்களின் ஹோம் பேஜை பார்வையிடும் எவரும் தளங்களின் விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் எதிராக இருந்தாலும் இந்த வீடியோக்களை உடனடியாக எதிர்கொள்வதை டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும் இந்த வீடியோக்கள் வன்முறைச் செயலைக் குறிக்கும் ‘grope’, forced sex (கட்டாய செக்ஸ்) போன்ற முக்கிய வார்த்தைகளுடன் tag செய்யப்பட்டுள்ளன. ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த வலைத்தளங்களின் ஹோம் பேஜின் மணிநேர ஸ்கிரீன் ஷாட்களை(hourly screenshots) 2017-18க்கு இடையில் 6 மாதங்களுக்கு சேகரித்தனர். முதல் முறை யூஸர்களுக்கு இந்த வயதுவந்த வலைத்தளங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கம் சிக்கலானது என டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிளேர் மெக்ளின் கியூசி குறிப்பிட்டுள்ளார்.

Also read... ஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...!

ஒழுங்குமுறை வழிமுறைகள் மற்றும் நடைமுறையில் அதன் செயல்திறன் ஆகியவற்றுடன் “பிரதான ஆபாச வலைத்தளங்களில் எளிதாகவும், சுதந்திரமாகவும் கிடைக்கக்கூடிய குற்றவியல் விஷயங்களைப் பற்றி" இந்த ஆய்வின் முடிவுகள் கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறினார். பாலியல் வன்முறை இடம்பெறும் வீடியோக்கள் தங்கள் தளங்களில் தடைசெய்யப்பட்டுள்ளதாக Pornhub மற்றும் Xvideos கூறுகின்றன. ஒருமித்த உறவிற்கும், பாலியல் வன்முறைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல் இந்த ஆராய்ச்சி குறைபாடையுடையதாக உள்ளதாகவும் Pornhub கூறுகிறது.

அதே சமயம் Pornhub போல Xvideos-ம் ஆராய்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதை நாங்கள் தடைசெய்கிறோம், சட்டவிரோதமான உள்ளடக்கத்தை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரும் போது அதை அகற்றுவோம், பொருத்தமான சந்தர்ப்பங்களில் சட்டத்துடன் இணைந்து செயல்படுகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் பல சுயாதீன அறிக்கைகள் வயதுவந்தவர்களுக்கான வீடியோக்களின் நுகர்வு முறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: