இன்றைக்கு மக்களிடம் இணையதளப் பயன்பாட்டில் சிறுவர்களுக்குப் பிடித்த பாடல்கள் தொடங்கி செய்திகள் படிப்பது – பார்ப்பது மற்றும் பல விதமான கேம்கள் விளையாடுவது என 24 மணி நேரமும் இணையத்தை உபயோகிக்கின்றனர். அதிலும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என பல்வேறு சோசியல் மீடியாக்களில் அக்கவுண்ட்களை ஓபன் செய்து ரீல்ஸ் வீடியோ போடுவது, ஸ்டேட்டஸ் அப்லோடு செய்வது என பிடித்த விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுப்போன்று சோசியல் மீடியாவில் வெளியாகும் சில வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாகக் கவரும். ஆனால் தற்போது ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்று இணைய வாசிகளின் கோபத்தைச் சம்பாதித்துள்ளது. அசைவ பிரியர்கள் ஹோட்டல் ஸ்டைலில் சாப்பிட வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ளவர்களை யூடியூப் பார்த்து சமையுங்கள் என்று கூறுவதை அனைத்து வீடுகளிலும் கேட்டிருப்போம். அப்படியொரு சமையல் வீடியோ தான் நெட்டிசன்களைக் கடுப்பாக்கியுள்ளது.
ட்விட்டரில் வெளியான அந்த வீடியோவில் இங்கிலாந்து சமையல் செய்முறை ஒன்று பகிரப்பட்டிருந்தது. அதில், முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்குகின்றனர். பின்னர் அதனுடன் சில சிக்கன் பீஸ்கள், மசாலாவைச் சேர்க்கின்றனர். இதனையடுத்து பாஸ்மதி அரிசி சேர்த்து வேகவைக்கின்றனர். இறுதியில் கீரையும் சேர்த்து சமைகின்றனர். பாஸ்மதி அரிசி, கீரை, சிக்கன் ஸ்டாக் க்யூப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு ஒருவர் உணவை சமைக்கும் இந்த உணவை சிக்கன் குருமா என்கின்றனர்.
Read More : இந்த பிரச்சனை இருக்கிறவங்க பேரிச்சம் பழம் சாப்பிடக்கூடாதா..! ஏன் தெரியுமா..?
இந்த வீடியோ தான் சில நாள்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியானது. பகிரப்பட்ட நாள் முதல் இந்த சிறிய குக்கிங் கிளிப் இணையத்தில் வைரலாகிறது. ஆம் எதிர்மறையானக் கருத்துக்களோடு இதுவரை 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
One-Pot Chicken Korma 😍 pic.twitter.com/pQDerTbyZX
— Tasty UK (@TastyUK) December 3, 2022
இதற்கு கருத்துக்களைத் தெரிவித்த டிவிட்டர் யூசர் ஒருவர், உங்கள் குழுவில் யாருக்கும் சமைக்கத் தெரியாதா? என்றும் சிக்கன் குர்மாவே இல்லை என்பதை உறுதியாக கூறுவேன் எனவும் டிவிட் செய்துள்ளனர். மற்றொரு டிவிட்டர் யூசர் ஒருவர், மிக்க நன்றி. நான் விரும்பாத விருந்தினருக்கு ஏதாவது உணவளிக்க தேடிக்கொண்டிருந்தேன். இதோ இப்ப கிடைச்சிருச்சு. இது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என கலாய்த்துக் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதோடு மற்றொரு இணையவாசி ஒருவர், சிக்கன் குருமாவின் புகைப்படத்தை வெளியிட்டு, இது தான் சிக்கன் குர்மா என்றும், உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இதைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாகஇணையத்தில் பிடித்த விஷயங்கள் மட்டுமில்லை மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களுக்குக்கூட டிரெண்டாகும் என்பதற்கு இந்த குக்கிங் வீடியோ சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Non Vegetarian