Home /News /trend /

சிக்கன் 65 சென்னையில கண்டுபுடிச்சதாம்! வரலாறு கேட்டா அசந்து போயிடுவீங்க

சிக்கன் 65 சென்னையில கண்டுபுடிச்சதாம்! வரலாறு கேட்டா அசந்து போயிடுவீங்க

கோழி அறுபத்தஞ்சு (Chicken 65 )!

கோழி அறுபத்தஞ்சு (Chicken 65 )!

Chicken 65 Interesting Fact | நம் சுவை நரம்பை ஆளும் சிக்கன் 65 இந்தியாவில் தோன்றியது என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் சென்னையில் உள்ள ஒரு பிரபலாமான உணவகத்தில் தோன்றியது என்பது தான் இன்னும் சுவாரஸ்யமான ஒன்று.

சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சிக்கனில் எத்தனை வகையான உணவு வகைகள் வந்தாலும் சிக்கன் 65 என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும் என்பதில் சந்தேகமில்லை. பிரியாணி, சப்பாத்தி, குழம்பு வகைகள் என எது சாப்பிட சென்றாலும் சிக்கன் 65 என்பது சொல்லப்படாத மெனுவாக வந்து நமது மேசையில் அமர்வது வழக்கமான ஒன்று. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் 65க்கு மனம் மயங்காதவர்கள் யாருமே இல்லை.நீங்கள் நினைப்பது சரிதான். வடிவேலு படக் காமெடி போல் கோழி 65 பற்றிய விளக்கம் தான் இந்த பதிவு.

சிக்கன் 65 உடைய நிறம், மனம், அதன் அளவு என அனைத்துமே நாக்கை நடனமாட செய்யும் ஒன்றாகவே இருக்கும். சுட சுட ஒரு சிக்கன் 65 போன்லெஸ் பீசை எடுத்து அதன் நறுமணம் உணர்ந்து நிறம் பார்த்து மொறுமொறுவென இருக்கும் அதன் சுவை உணர்ந்து உண்ணும்பொழுது சொர்க்கத்தை கண்டுவிடலாம் என்று தான் தோணும். அப்படி நம் சுவை நரம்பை ஆளும் சிக்கன் 65 இந்தியாவில் தோன்றியது என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் சென்னையில் உள்ள ஒரு பிரபலாமான உணவகத்தில் தோன்றியது என்பது தான் இன்னும் சுவாரஸ்யமான ஒன்று.

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலும் கூட பெரும்பாலான உணவகங்களை ஆளும் சிக்கன் 65, 1965ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில்தான் அறிமுகமானதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது. புஹாரி ஹோட்டலின் உரிமையாளரும், தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம். புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Also Read : உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் சவால்... இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?


வடிவேலு காமெடிக்கு முன்னரே அமிதாப் பச்சன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் 65 முதன் முதலில் கண்டுபிடித்தது யார் என்ற கேள்வி கேட்டு அதற்கு அவர் ஏ.எம் புஹாரி என்ற பதிலும் அளித்துள்ளார். இப்படி பல சம்பவங்களை கோழி 65 கொண்டுள்ளது.

பொதுவாகவே புஹாரி பிரியாணி பிரபலமான ஒன்று.புஹாரி ஹோட்டல் 1951ம் ஆண்டு அண்ணா சாலையில் தொடங்கப்பட்டதாகும். அதனை தொடர்ந்து பிரியாணிக்கு பேர் போனதாக வலம் வரும் இது தான் சிக்கன் 65 கண்டுபிடிக்கப்பட்ட உணவகம் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டதாம் புஹாரி ஹோட்டல் குழுமம். அந்த தாராள மனப்பான்மை தான் இன்று நம் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊற வைக்கும் சிக்கென் 65ன் பிரபலத்திற்கு காரணம். ஆகையால் நாமும் தாராளமனப்பான்மை கொண்டு பகிர்ந்து வாழ்வோம். இதை தான் போறபோக்குல ஒரு கருத்து சொல்வது என்பார்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Chicken, Trending, Viral

அடுத்த செய்தி