கோவிட்-19: தடுப்பூசி போடுங்க, ஃப்ரீயா 2 கிலோ தக்காளி வாங்கிட்டு போங்க - சத்தீஸ்கர் அதிகாரிகளின் புது ஐடியா!

கோவிட்-19: தடுப்பூசி போடுங்க, ஃப்ரீயா 2 கிலோ தக்காளி வாங்கிட்டு போங்க - சத்தீஸ்கர் அதிகாரிகளின் புது ஐடியா!

மாதிரி படம்

மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் எடுத்துள்ள ஆயுதம் தடுப்பூசி. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்களுக்கு இலவசங்களை வழங்கி வருகின்றன. இந்த பட்டியலில் நம் நாடும் சேர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை அடுத்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி பெறும் அனைவருக்கும் 2 கிலோ தக்காளியை நகராட்சி அதிகாரிகள் இலவசமாக வழங்குகிறார்கள். இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியை பெற அங்குள்ள மக்கள் ஆர்வம் காட்டாததே என்றும் கூறப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா உச்சத்தில் இருந்த போது போடப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். அன்றைய நிலையில் எப்போது தான் தடுப்பூசி வரும் என்று நாட்டு மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

கடந்த ஜனவரி முதல் இந்தியாவில் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், தடுப்பூசி போட்டு கொள்வதால் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும், கடைசியில் தடுப்பூசியே எமனாக மாறி விடும் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதற்கேற்ப சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்ததால் பலரும் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். பிஜாப்பூர் மக்களும் தடுப்பூசியை பெற ஆர்வமின்றி உள்ளனர். இதனை அடுத்து இம்மக்களை தடுப்பூசி போட்டு கொள்ள ஊக்குவிக்கும் வகையில், தடுப்பு மருந்து எடுத்து கொள்ளும் அனைத்து மக்களுக்கும் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். அந்த பகுதியில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Also read... கொரோனா விழிப்புணர்வு - மும்பை காவல்துறையின் வித்தியாசமான முயற்சி!

இதனிடையே நகராட்சி அதிகாரிகள் அறிவித்தபடி தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதற்காக மொத்த காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து தக்காளியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிட் -19 தடுப்பூசி சேவையை வழங்கும் பிஜாப்பூரில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இந்த இலவச தக்காளி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலவச தக்காளி திட்டம் காரணமாக தடுப்பூசி போட்டு கொள்ளவதற்கான ஆர்வம் மக்களிடையே சற்று அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: