ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கேமராவும் செல்போன்ல.. எடிட்டிங்கும் செல்போன்ல.. யூடியூப்பில் கலக்கும் கிராமம்!

கேமராவும் செல்போன்ல.. எடிட்டிங்கும் செல்போன்ல.. யூடியூப்பில் கலக்கும் கிராமம்!

வைரலாகும் கிராமம்

வைரலாகும் கிராமம்

முகவரி இல்லாத சாமானிய மனிதர்களை உலகறியச் செய்யும் சக்தி வாய்ந்த ஊடகமாக யூ டியூப் வலைதளம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முகவரி இல்லாத சாமானிய மனிதர்களை உலகறியச் செய்யும் சக்தி வாய்ந்த ஊடகமாக யூ டியூப் வலைதளம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. யூ டியூப் மட்டுமல்ல, டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் கோடிக்காண மக்களின் கலைத் திறன்களை வெளிக்கொணருவதாக அமைகின்றன.

  குறிப்பாக, யூ டியூப் தளத்தில் உலக அளவில் அதிக ரீச் பெற்றதற்காக அந்த நிறுவனம் சார்பில் டயமண்ட் பட்டன் கொடுத்து பாராட்டப்பட்ட Village Cooking சானலை எடுத்துக் கொள்வோம். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சின்னஞ்சிறிய அளவில் தொடங்கிய இவர்களது முயற்சிக்கு, இன்று உலக அளவில் பார்வையாளர்கள் இருக்கின்றனர்.

  டிக் டாக்கில் பொழுதுபோக்கிற்காக வேடிக்கையாக பேசி வந்த ஜி.பி.முத்து இன்று விஜய் டிவியின் பிக் பாஸ் உள்ளிட்ட முன்னணி டிவி ஷோக்கள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஏழை, பணக்காரர், அழகானவர், சுமாரானவர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. நீங்கள் வெளிப்படுத்தும் திறன் பிறருக்கு பிடித்தமானதாக இருந்தால் கண்டிப்பாக ரீச் கிடைக்கும்.

  Read More : வாழும் அதிசயம்.. காண்போரை ஆச்சரியத்தில் மிரள வைக்கும் வீடியோ!

  எப்போதும் படப்பிடிப்பு தளமாகக் காட்சியளிக்கும் கிராமம்

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துளசி என்ற கிராமமும் யூ டியூப் புண்ணியத்தால் எப்போதும் படப்பிடிப்பு தளம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஞானேந்திர சுக்லா மற்றும் ஜெய் வர்மா ஆகிய இருவரும் சேர்ந்து ‘Being Chhattisgarhiya’ என்ற பெயரில் சானல் நடத்துகின்றனர்.

  கடந்த 2018ஆம் ஆண்டில், பார்த்த வேலையை விட்டுவிட்டு இவர்கள் இருவரும் சானல் தொடங்கினர். பெரிய அளவுக்கான சாதனங்கள் எதுவும் கிடையாது. சாதாரண மொபைல் கேமரா கொண்டு படம்பிடித்து, அதிலேயே எடிட்டிங் செய்து வீடியோக்களை வெளியிட்டனர். சானல் வளர தொடங்கிய பிறகு அதில் கிடைக்கும் வருவாய் மூலமாக தொழில்நுட்ப சாதனங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

  இவர்களது சானலில் இதுவரையிலும் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சின்ன, சின்ன நாடக காட்சிகள், பாடல் காட்சிகள், நகைச்சுவை போன்றவற்றை படம்பிடித்து யூ டியூபில் வெளியிடுகின்றனர்.

  கிராம மக்களே கலைஞர்கள்

  படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரபலமான நபர்கள் யாரையும் இந்த சானலில் பயன்படுத்துவது இல்லை. எல்லோருமே துளசி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தான். அதிலும் ஓரிருவருக்குத் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்றவர்கள் தன்னார்வ அடிப்படையில் நடிக்கின்றனர்.

  எப்படியும் நம் முகம் ஸ்கிரீனில் தெரியும் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம், இதன் மூலமாக பாலிவுட் சினிமா வாய்ப்பு கிடைக்காதா என்ற கனவு ஒரு பக்கம் இருக்கிறது.

  மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம்

  சானல் ஓனர்களான சுக்லா மற்றும் சர்மா ஆகிய இருவரும் இந்தத் தொழிலுக்கு வரும் முன்பாக மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்துள்ளனர். இப்போது அவர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் கிடைக்கிறதாம். குழந்தைகள் முதல் 80 வயது பெரியவர்கள் வரையில் இந்த சானலில் நடித்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral