மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது வழங்கி கவுரவிப்பு.. சத்தீஸ்கரில் சுவாரஸ்யச் சம்பவம்

ரூபி என்ற மோப்ப நாய்.

சத்தீஸ்கரில் குற்றச்சம்பவங்களைக் கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாயின் சேவையைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை வழங்கி காவல்துறையினர் கவுரவித்துள்ளனர்.

  • Share this:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிக்க ரூபி என்ற மோப்ப நாய் உதவியுள்ளது. அதீத மோப்ப திறனால், திருட்டுப் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவியதோடு மட்டுமல்லாமல், திருடர்களையும் கண்டுபிடிக்க காவல்துறையினருக்குத் துணைபுரிந்திருக்கிறது. இதனால்,சத்தீஸ்கர் காவல்துறை வரலாற்றில் சிறந்த காவலர் என்ற விருது ரூபி மோப்ப நாய்க்கும், அதனைப் பராமரித்து வரும் வீரேந்திரா என்பவருக்கும் காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ராய்கார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், மாதம் முழுவதும் சிறப்பாகச் செயல்படும் காவலரின் சேவையைப் பாராட்டி, ’மாதத்தின் சிறந்த காவலர்’ என்ற விருதை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அந்தப் பட்டத்துடன் சிறிய தொகை ஒன்றைப் பரிசாக வழங்குவதாகத் தெரிவித்த அவர், அந்தக் காவலரை ஊக்குவிக்கும் விதமாக அவரின் புகைப்படங்கள் மற்ற காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

காவல்துறையினரின் சேவை மேம்படும் என்பதற்காக இந்தப் பட்டம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து, ரூபி மோப்ப நாய் குறித்து பேசிய அவர், முக்கியமான திருட்டு வழக்குகளில் துப்பு துலக்க அந்த நாயின் செயல்பாடு மிகவும் முக்கியமாக இருந்ததாகக் கூறினார். குறிப்பாக, சாரங்கா அரண்மனை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க, ரூபி மோப்ப நாயின் பங்களிப்பு பெரு உதவியாக இருந்தது என்றார்.

Also read: விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்களிடையே மோதல்கள் ஏன்? ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை

சாரங்கா அரண்மனையில் கொள்ளையடிக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்வர் தட்டுகளை ரூபி மோப்ப நாயும், வீரேந்திராவும் கண்டுபிடித்தார்கள் எனக் கூறிய காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங், அதனைத் திருடிய கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க உதவினார்கள் என்றார். இதற்காக, ரூபி நாயின் சேவையைப் பாராட்டி மாதத்தின் சிறந்த காவலர் என்ற பட்டத்தை வழங்கியதாகவும் ராய்கார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறினார்.

பாஸ்டார் உள்ளிட்ட சிக்கலான பகுதிகளிலும் மோப்ப நாய்கள் மிகவும் திறமையாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதாகத் தெரிவித்த அவர், புதாரு, ஒமு, பைஜூ, பூரி ஆகிய மோப்ப நாய்கள் 20 அடி தூரத்தில் இருக்கும் வெடிபொருட்களைக்கூட கண்டுபிடித்துவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது என்றார். இதேபோல், மேற்குவங்க காவல்துறையில் ஆஷா என பெயரிடப்பட்ட மோப்பநாய், ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ், லாப்ராடர்ஸ் (Labradors) ஆகிய மோப்ப நாய்களுக்கு இணையாக செயல்படுவதாக பாராட்டப்பட்டது.

வெடி பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆற்றல் பெற்றதாக அது இருந்தது. இந்திய ராணுவத்தில் இருந்த சோபி மற்றும் விதா மோப்ப நாய்கள் எல்லை ஊடுருவல், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளிலும் திறமையாகச் செயல்பட்டது. இதனைப் பாராட்டிய பிரதமர் மோடி, 74வது சுதந்திர தின விழாவின்போது அந்த இரு நாய்களுக்கும் ’Chief of Army Staff’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் அந்த இருநாய்களும் இணையத்திலும் வைரலாகின. மன் கீ பாத் நிகழ்ச்சி ஒன்றிலும், அந்த இரு மோப்ப நாய்களின் சேவையை பிரதமர் மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: