ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

குழந்தை பிறக்க பெண்கள் முதுகில் நடக்கும் சத்தீஸ்கர் சாமியார்கள் - வைரல் வீடியோ

குழந்தை பிறக்க பெண்கள் முதுகில் நடக்கும் சத்தீஸ்கர் சாமியார்கள் - வைரல் வீடியோ

சத்தீஸ்கரில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முதுகில் சாமியார்கள் நடந்து செல்லும் வினோத விழா பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கரில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முதுகில் சாமியார்கள் நடந்து செல்லும் வினோத விழா பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கரில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முதுகில் சாமியார்கள் நடந்து செல்லும் வினோத விழா பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் 'அங்கர்மேட்டி தேவி' கோவிலில் வினோத திருவிழா ஒன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் குழந்தை வேண்டி தவம் இருக்கும் பல பெண்கள் தரையில் படுத்திருப்பார்கள். அவர்களின் முதுகில் கொடிகளை ஏந்தியபடி சாமியார்கள் பலர் விறுவிறு என்று நடந்து செல்வார்கள்.

இப்படி சாமியார்கள் முதுகில் மிதித்து ஆசீர்வாதம் செய்தால் குழந்தை பிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, ‘மாதாய் மேளா’ நிகழ்ச்சியில் இந்த வினோதம் நிகழ்ந்தது. வழக்கமாக தீபாவளிக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி அங்கர்மோதி தேவியிடம் வரம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த சடங்கு 500 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உள்ளூர்வாசிகள் பாரம்பரியத்தின் சக்தியை உறுதியாக நம்புவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் கலந்துகொண்ட பிறகு பல பெண்கள் கருத்தரித்ததாகவும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். சுமார் 200 பெண்கள் தரையில் கிடக்கும்போது, சாமியார்கள் மந்திரங்களை முழக்கமிட்டு, கொடிகளை ஏந்தியபடி பெண்களின் முதுகில் நடந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில ஆணையத்தின் தலைவர் (Chairperson of Chhattisgarh State Commission) கிரண்மய் நாயக், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இதுபோன்ற சடங்குகளுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூறினார். இந்த நடைமுறை தீங்கு விளைவிக்கும் என்றும் பெண்களின் முதுகில் ஏறிச் செல்வது சரியானதல்ல என்றும் அவர் கூறினார். இதுபோன்ற சடங்குகளின் அபாயங்கள் குறித்து கிராம மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக கிராமத்திற்கு வருவேன் என்றும் அவர் கூறினார்.

இந்த வினோத நிகழ்வு குறித்து ட்விட்டரில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பலரின் புருவங்களை உயர்த்திய சடங்கு மட்டுமல்ல, இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர், அவர்களில் பெரும்பாலோர் முகக்கவசங்கள் இல்லாமல் இருந்தனர். சடங்கு செய்யப்படுவதைக் காண பலர் கூடியிருந்ததால் சமூக இடைவெளி காணாமல் போனது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த வினோத திருவிழா நடைபெற்றது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

Published by:Rizwan
First published:

Tags: Chhattisgarh, Trending