சென்னை ஸீஷெல் அருங்காட்சியகத்தில் டைனோசர் பிரிவில் 14 இயந்திர மாதிரிகள் சேர்ப்பு!

டைனோசர்

தொல்பொருள் ஆய்வாளர்கள் கூற்று படி, இர்ரிட்டேடரின் நீளம் 6 முதல் 8 அடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது

  • Share this:
சென்னையில் உள்ள டைனோசர் ஸீஷெல் அருங்காட்சியகத்தில் புதிய இயந்திர மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாடல்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டு, அவை வால்களை நகர்த்துவது, கழுத்தை உயர்த்தி பார்ப்பது மற்றும் கர்ஜிப்பது போன்ற மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சென்னை, மகாபலிபுரத்தில் இருக்கும் இந்திய ஸீஷெல் அருங்காட்சியகத்தில், புதிதாக டைனோசர் காட்சியகம் சேர்க்கப்பட்டுள்ளது. இது, பல ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பினோசாரிட் என்ற டைனோசரின் இனத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த அருங்காட்சியகம், ஜூலை மாதம் திறக்கப்பட்டது. மேலும், இதில், 14 மெக்கானிக்கல் மாடல்கள் சேர்க்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாரேனும் இந்த டைனோசர்களை கடந்து செல்லும் போது, கர்ஜிப்பது, கழுத்தை உயர்த்தி பார்ப்பது போன்ற பல்வேறு ரியாக்ஷன்கள் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஸீஷெல் அருங்காட்சியகத்தின் உரிமையாளரான முஹம்மது ரிஸ்வான், டைனோசர் காட்சியகத்தை குழந்தைகளுக்காக உருவாக்கியதாக கூறினார். பெரியவர்கள் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கும் போது, குழந்தைகள் சோர்வடையாமல் இருப்பதற்காகவே இந்த காட்சியகம் என்றும் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், சேர்க்கப்பட்ட முத்து அருங்காட்சியத்துக்கு உருவாக்கப்பட்டது. அதற்குப் பின்னர், 2020 ஆம் ஆண்டில், தாதுக்களுக்கான காட்சியகம் (மினரல் மியூசியம்) அமைக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலான கோவிட் தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்குக் காரணமாக, இந்த காட்சியகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்று தி ஹிந்து அறிக்கையிட்டது.

இந்த டைனோசர் அருங்காட்சியகத்தில், ஷார்ட்-ஹேண்டட், டி ரெக்ஸ் வெலாசிராப்டர் உள்ளது. இர்ரிடேட்டர் (இரரிட்டோர்) என்ற பெயர் கொண்ட காட்சியகத்தின் பிராதன ஈர்க்கும் அம்சம், பழங்கால ஆய்வாளர்களின் உணர்வுகளைப் பிரதிப்பலிப்பதாக அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் கண்டறிந்த இர்ரிட்டேடரின் மண்டை ஓடு, பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும், அவள் சேகரிப்பாளர்களால் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Also read... காலநிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டிற்குள் எம்பரர் பென்குயின் இனம் முழுவதும் அழியும் அபாயம்!

தொல்பொருள் ஆய்வாளர்கள் கூற்று படி, இர்ரிட்டேடரின் நீளம் 6 முதல் 8 அடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ராட்சத அளவு கொண்ட விலங்கின் எடை 1 டன் இருக்கலாம். ஆனால், இவை தான் உலகின் மிகச்சிறிய ஸ்பினோசாரிட்ஸ் என்பது ஆச்சரியமான தகவல். ரிஸ்வானின் தந்தை ராஜா முஹம்மது தான் இந்த தொகுப்பின் சொந்தக்காரர். முகம்மது, ராமேஸ்வரத்தை சேர்ந்தவர். இவர் ஒரு மீன் வியாபாரி. இந்த அருங்காட்சியகத்தை 2012 ஆம் ஆண்டு அமைத்தார். தன்னுடைய தந்தை மினரல், கிளிஞ்சல்கள் மற்றும் முத்துக்களை கடந்த 38 ஆண்டுகளாக சேகரிக்கிறார் என்று ரிஸ்வான் கூறினார்.

சிங்கப்பூருக்கு சென்று வந்த பின்னே, மினரல்களுக்கு மட்டுமே ஒரு பிரத்யேகமான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார் என்றும் கூறினார். “மெர்லியான் கண்டவுடன், அவர் அதனை கிளிஞ்சல்களை மட்டுமே வைத்து உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்” என்று ரிஸ்வான் தி இந்துவுக்கு தெரிவித்தார்.

முத்துக்கள் மற்றும் கிளிஞ்சல்கள் மேல் தன் தந்தைக்கு இருந்த பிரியம் பற்றி பேசிய ரிஸ்வான், தன்னுடைய தந்தை 19 வயதிலேயே மீன் மார்க்கெட்டில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதாகக் கூறினார். கடற்கரையில் நடக்கும் போது, கிளிஞ்சல்களை சேகரித்து சந்தையில் விற்பார். ஏற்றுமதி செய்வதின் வழியே பணம் சம்பாதிக்கத் தொடங்கிய போது, அந்த பணத்தை கிளிஞ்சல்கள் சேகரிப்பில் செலவிட்டார் என்று தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: