• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அப்பா கார காணும் ... அது வேளச்சேரி பிரிட்ஜ்ல இருக்கு - ட்ரெண்டாகும் Chennai rains ஹேஷ்டேக்

அப்பா கார காணும் ... அது வேளச்சேரி பிரிட்ஜ்ல இருக்கு - ட்ரெண்டாகும் Chennai rains ஹேஷ்டேக்

Chennai rains ஹேஷ்டேக்

Chennai rains ஹேஷ்டேக்

ChennaiRains : நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் விஜய் நீரில் குதித்து நீந்து வருவது போல் அலுவலகத்திற்கு நாங்கள் வருகின்றோம் எனவும் , இந்த மழைக்குள்ளும் அலுவலகங்கள் படகு எடுத்துக் கொண்டாவது அலுவலகம் வாருங்கள் என கூறுவதாகவும் நகைச்சுவையாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இணையத்தில் Chennai Rains ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த டேகில் பலரும் மழை குறித்து நகைச்சுவையாகவும் பதிவுகளை ட்வீட் செய்துள்ளனர்.சென்னை மாநகரம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இடைவிடாது பெய்த மழை இன்னும் விட்டுவிட்டு தொடர்கிறது.

    இதனால் வடசென்னை பகுதிகளான, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, பேரக்ஸ் சாலை, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் அருகே கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள 15 தெருக்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது.

    திருவிகநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ளன. கொருக்குப்பேட்டை, சிவாஜிநகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் உடமைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. பழைய கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதி என்பதால் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கழிப்பிடம் செல்லக்கூட வழியில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். பல குடும்பங்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு, நீரில் மூழ்கிய உடமைகளை அப்படியே விட்டுவிட்டு மாற்று இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    பொதுமக்களே குடங்களில் தண்ணீரைத் எடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் சொந்த செலவில் மோட்டாரை வாடகைக்கு எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க ட்விட்டரில் பலரும் இந்த மழையில் அலுவலகம் இப்படித் தான் செல்கிறோம் , நிதர்சனம் இப்படியாக உள்ளது என நகைச்சுவையாக மீம்ஸ்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.





























    நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் விஜய் நீரில் குதித்து நீந்து வருவது போல் அலுவலகத்திற்கு நாங்கள் வருகின்றோம் எனவும் , இந்த மழைக்குள்ளும் தனியார் அலுவலகங்கள் படகு எடுத்துக் கொண்டாவது அலுவலகம் வாருங்கள் என கூறுவதாகவும் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: