இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. அதைத் தொடர்ந்து புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.
இந்தியாவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை முதல் ஐந்து நகரங்களாக விளங்குகின்றன. இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது என அவதார் நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது .
பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கத்தில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக உள்ளது அவதார் குழுமம் (DEI), இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு தகவலின்படி, இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. இதில், சென்னைக்கு அடுத்து புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன. டெல்லி, சென்னையைவிட 30 புள்ளிகள் குறைவாக பெற்று 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சுற்றுச்சூழலை வளர்க்கும் நகரங்களைக் கண்டுப்பிடிக்கும் இந்த ஆய்விற்காக 111 நகரங்களில் உள்ள 300 நிறுவனங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பெண்கள் தற்போதைய எளிதான வாழ்க்கைக் குறியீடு, PLFS, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குற்றப் பதிவுகள், NFHS, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை உட்பட 200க்கும் மேற்பட்ட தரவுகளின் ஒருங்கிணைப்பாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை பற்றி அவதார் குழுமத்தின் நிறுவனர் – தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறீயதாவது, “தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்கள் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருப்பது ஆச்சரியமானது அல்ல, அரசியல்-வரலாற்று சூழலில் இந்த பிராந்தியங்களில். ஹூப்ளி, நாக்பூர், அகமதாபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் பெண்களின் வேலைவாய்ப்புக்கான நம்பிக்கைக்குரிய மையங்களாக உயர்ந்துள்ளது, அவற்றின் உயர் தொழில்துறை சேர்க்கை மதிப்பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் சமூக உள்ளடக்கத்தில் பின்தங்கிவிட்டன, ஏனெனில் பாதுகாப்புத் தரம் குறைந்ததாலும், பெண்கள் வேலைவாய்ப்பைத் தொடர ஏதுவாக இல்லாத நிலையாலும் பின்தங்கி உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பிற்கான சிறந்த நகரங்களின் தகவல்
சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் 10 நகரங்களாக உள்ளது .
திருச்சிக்கு முதலிடம்
திருச்சிராப்பள்ளி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகியவை ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட முதல் 10 நகரங்களாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral, Women Employees