• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வேளச்சேரி , கொளத்தூர்வாசிகள் Now ... இணையத்தில் வைரலாகும் Chennai Rains ஹேஷ்டேக்

வேளச்சேரி , கொளத்தூர்வாசிகள் Now ... இணையத்தில் வைரலாகும் Chennai Rains ஹேஷ்டேக்

சென்னை மழை தொடர்பான மீம்ஸ்

சென்னை மழை தொடர்பான மீம்ஸ்

Chennai Rains : சென்னையில் பெய்து வரும் கனமழை தொடர்பாக ட்விட்டரில் #ChennaiRains என்ற ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது. இதில் பலரும் சென்னையில் தற்போதைய மழை குறித்து நகைச்சுவையாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை செய்தது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், அம்பத்தூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டம் ரவுண்டானா பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன.

    சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மதுரவாயல் சுற்றுவட்டாரங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகள் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன. வாகன ஓட்டிகளும் வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கனமழையால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் உயர்ந்து வருகின்றன.

    இதேபோல் வேளச்சேரி மெயின்ரோடு, ஐந்து முனை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், வெள்ள நீரில் சிக்கி பழுதடைந்தன. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியதால் பேருந்து, கார்கள் ஊர்ந்து சென்றன

    இந்நிலையில் தற்போது இணையத்தில் சென்னையில் பெய்து வரும் மழை தொடர்பாக #ChennaiRains எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த ஹேஷ்டேக் பக்கத்தில் பலரும் சென்னையின் தற்போதைய நிலை குறித்த படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.















    இதில் நகைச்சுவையாக இந்த மழைக்குள் அலுவலக மேனேஜர் போட் எடுத்து கொண்டு வேலைக்கு வா என கூறுவதாகவும், ஆஹா என்ன மழை என நடிகர் விவேக் டெம்ப்லேட் வைத்தும் பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: