முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கனமழையால் தத்தளிக்கும் சென்னை - ட்விட்டரில் ட்ரெண்டாகும் Chennai Rains ஹேஷ்டேக்

கனமழையால் தத்தளிக்கும் சென்னை - ட்விட்டரில் ட்ரெண்டாகும் Chennai Rains ஹேஷ்டேக்

ட்ரெண்டாகும் ChennaiRains ஹேஷ்டேக்

ட்ரெண்டாகும் ChennaiRains ஹேஷ்டேக்

Chennai Rains : ட்விட்டரில் சென்னை மழை குறித்து ChennaiRains என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  • Last Updated :

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் மழைநீரில் தத்தளிக்கின்றன. நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால் அங்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மழை காரணமாக சென்னை சூளைமேடு ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதன் காரணமாக பணிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் தவித்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் சென்னை மழை குறித்து ChennaiRains என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. பலரும் இந்த ஹேஷ்டேக்கில் சென்னை மழை குறித்த வீடியோ மற்றும் படங்களை பதிவிட்டு வருகின்றன.சிலர் நகைச்சுவையாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

First published:

Tags: Chennai rains, Weather News in Tamil