• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சென்னை ஆட்டோ ஓட்டுநரின் அபார சாதனை - கவுரவித்த கின்னஸ் குழு!

சென்னை ஆட்டோ ஓட்டுநரின் அபார சாதனை - கவுரவித்த கின்னஸ் குழு!

2 வீலில் ஓட்டி சென்னை ஆட்டோ ஓட்டுநர் அபார சாதனை

2 வீலில் ஓட்டி சென்னை ஆட்டோ ஓட்டுநர் அபார சாதனை

மூன்று வீல் ஆட்டோவை 2 வீலில் ஓட்டிய சென்னை ஆட்டோ ஓட்டுநர் மணியின் சாதனையை கவுரவிக்கும் விதமாக, அவரின் சாதனை வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கின்னஸ் குழு மீண்டும் வெளியிட்டுள்ளது.

  • Share this:
இன்ஸ்டாகிராமில் உள்ள கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் பக்கம், பழைய கின்னஸ் சாதனை வீடியோக்களை அந்தப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது. அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணியின் வீடியோவை பகிர்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி, மூன்று வீல் ஆட்டோவை 2 வீலில் மட்டுமே ஓட்டக்கூடிய அசாத்திய திறமை படைத்தவர். அவரின் இந்த திறமை 2016 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை பக்கத்திலும் இடம்பெற்றது.

மீண்டும் ஒருமுறை பகிரப்பட்ட அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வைகளை குவித்து வருகிறது. சுமார் 3 நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், ஆட்டோ ஒட்டுநர் மணி மூன்றுவீல் ஆட்டோவை 2 வீலில் இயக்குகிறார். 2.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கி, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தார். இந்த வீடியோவின் கேப்சனில், ஆட்டோவை சைட் வீலில் இயக்கி மணி சாதனை புரிந்துள்ளார் என கின்னஸ் சாதனை பக்கம் தெரிவித்துள்ளது.




இது குறித்து பேசிய மணி, சிறுவயதில் இருந்து ஆட்டோ மற்றும் பைக்குகளை அசாத்தியமாக இயக்க வேண்டும் என்பதில் அதிகம் விருப்பம் இருந்தாக தெரிவித்தார். 3 வீல் ஆட்டோவை அதிகம் பயன்படுத்தி வந்ததால், அதனை வித்தியாசமாக இயக்க வேண்டும் என சிந்தித்து, 2 வீலில் இயக்கும் வகையில் பயிற்சியை மேற்கொண்டதாக கூறியுள்ளார். இப்போது சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.

Also Read : மணமேடையில் கணவரை கண்டுகொள்ளமால் மணமகள் 'லவ் சேட்டை' - வைரல் வீடியோ

"நான் ஆட்டோவை 2 வீலில் இயக்குவது கின்னஸ் புத்தகதில் இடம் பிடிக்கும் என நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சிறுவயதில் இருந்து பைக் மற்றும் ஆட்டோ ஓட்டுவதில் எனக்கு மிகப்பெரிய விருப்பம். பைக்குகளில் ரேஸ் மற்றும் ஸ்டன்டுகளில் ஈடுபடுவதும் பிடிக்கும். அதனால், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடுவேன். அதேபோல் ஆட்டோவிலும் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என விரும்பினேன். மூன்று வீல் ஆட்டோவை, 2 வீலில் இயக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். மற்றவர்களிடம் சென்று பயிற்சி எடுக்கவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்தின்பேரில், என் ஆட்டோ மூலம் பயிற்சிகளை செய்தேன். சாலையில் 2 வீலில் ஆட்டோவை ஓட்டிச் செல்லும்போது, மக்கள் வியப்பாக பார்ப்பார்கள். அப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மகிழ்ச்சிக்கு இப்போது கின்னஸ் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதேபோல், பைக்குகளிலும் பல்வேறு ஸ்டண்டுகள் செய்ய வேண்டும் என்பது விருப்பம். அந்த ஸ்டண்டுகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் என் நம்புகிறேன்" எனக் கூறினார்.

ஆட்டோ மணியின் திறமையை பார்த்த நெட்டிசன்கள், மனதார வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என விரும்புவதாகவும், தமிழன் ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கே பெருமையான விஷயம் என்றும் கூறியுள்ளனர். அதேநேரத்தில், இந்த பயிற்சி விபரீதமான ஒன்று என்பதால், வீடியோ பார்ப்பவர்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என கின்னஸ் பக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பார்வையாளர்கள் அனுபவமில்லாமல், தேவையற்ற ரிஸ்க் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: