ஆத்தி பெரிய...வளைவா...இருக்கும் போலயே!

ஆத்தி பெரிய...வளைவா...இருக்கும் போலயே!
சென்னை கத்திப்பாரா
  • Share this:
டேய் ஓடுனா மட்டும் விட்ருவோமா... என சென்னை கத்திப்பாரா பாலத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலங்களில் ஒன்று சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம். கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது கட்டப்பட்டது.

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பிரபல வெளிநாட்டு கட்டிட நிபுணர்களின் வழிகாட்டுதலில் பிரமாண்ட முறையில் கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டது.


தாம்பரத்தில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்பவர்களும், தாம்பரத்தில் இருந்து அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு செல்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் வாகனத்தில் கடக்கும் போது மிக நீளமாக சென்று கொண்டே இருப்பதை ப்ரெண்ட்ஸ் பட வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. while crossing kathipara bridge in chennai டேய் ஓடுனா மட்டும் உன்னைய விட்ருவோமா... என்ற படி இந்த ட்ரோல் அமைந்துள்ளது.
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்