தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எத்தனையோ இருக்க, இன்றைக்கு பலரின் பேவரைட் உணவுகளில் ஒன்றாகவிட்டது பிரியாணி. அதைக் கொஞ்சம் வித்தியாசமான முறையில் வழங்கி பிரியாணி பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று. சென்னை கொளத்தூரில் அமைந்துள்ளது பாய் வீட்டுக் கல்யாணம் என்ற பிரியாணி ஏ.டி.எம் கடை, முழுமையாக ஆட்கள் யாரும் இன்றி இயந்திரங்கள் மூலம் ஆட்டோமேட்டிங்காக பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த கடையில் பிரியாணியை ஆர்டர் செய்து வாங்கும் வீடியோவை உணவு பிரியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த வெட்டிங் இயந்திரம் மூலம் வழங்கப்படும் பிரியாணி தான் இந்தியாவில் முதல் முறையாக இயந்திரம் மூலம் வழங்கப்படும் பிரியாணியாகவுள்ளது.
View this post on Instagram
கடைக்குள் நுழைந்தவுடனே டச் திரை மூலம் நமக்குத் தேவையான பிரியாணி வகையைத் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, ஆன்லைனில் முறையில் பணத்தைச் செலுத்தி சில நிமிடங்கள் காத்திருந்தால் உங்களின் சுவையான பிரியாணி பேக் செய்யப்பட்ட முறையில் கையில் கிடைத்துவிடும்.
Also Read : நிஜத்தில் ஒரு அப்துல் மாலிக்... ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் காலித் அகமது!
2020 இல் தொடங்கப்பட்ட இந்த கடை சென்னை பகுதிகளில் உணவு டெலிவரி சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரியாணிக்கு என்று எவ்வளவு கடைகள் இருப்பினும் முதல் ஏ.டி.எம் பிரியாணியாகச் சென்னையில் இருப்பது சென்னை நகருக்கு மற்றொரு சிறப்பம்சமாகவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.