கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் இருப்பதுபோல் சென்னையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் ஆட்டோவை மறுவடிவமைப்பு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே சிறந்த தீர்வு என அரசும், மருத்துவ நிபுணர்களும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என கருதி இன்றளவும் சிலர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. சமூகவலைதளங்களிலும், வாட்ஸ்அப் தளங்களிலும் சிலர் பரப்பிய தவறான தகவல்களால் மக்களிடையே இன்னும் அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்களின் காரணமாக, தற்போது மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று தீவிரமாக பாதிப்பதில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்களும் வலியுறுத்தி வருகின்றன. சென்னையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் முன்னெடுத்துள்ள வித்தியாசமான முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கவுதம் என்ற அந்த கலைஞர், கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆட்டோ தடுப்பூசிகள் இருப்பதுபோல் மறுவடிவமைப்பு செய்துள்ளார். ஆட்டோவின் முன்புறம், பக்கவாடு, மேற்புறம் மற்றும் பின்புறத்தில் தடுப்பூசி சிரஞ்சுகள் நீட்டிக் கொண்டிருப்பது போலவும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆட்டோவில் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் உபயோகப்படுத்த முடியாது என தூக்கியெறிப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பைப்கள் மற்றும் பேப்பர்களை கொண்டு, வழிப்புணர்வு கலைப் படைப்பை உருவாக்கியுள்ளார்.
இதற்காக ஆட்டோ முழுவதும் இளம் நீல நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆட்டோவை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவரின் இந்த முயற்சிக்கு சென்னை மாநகராட்சியும் ஆதரவு அளித்துள்ளது. கொரோனா ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு கருவிகளையும் கவுதம் உருவாக்கியுள்ளார். இது குறித்து பேசிய கவுதம், கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே இருக்கும் தயக்கத்தை போக்குவதற்காக வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்தார்.
Also read... 1 டஜன் மாம்பழங்களை ரூ.1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர் - நெகிழ வைக்கும் காரணம்!
தன்னுடைய முயற்சிக்கு சென்னை மாநகராட்சியும் ஆதரவு அளித்ததாகவும், தன்னுடைய பிரச்சாரம் மூலம் மக்களிடையே இருக்கும் தயக்கம் நீங்கி, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகளவு உள்ள நிலையில், போதுமான தடுப்பூசிகள் இருப்பு இல்லை. இதனை போக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Vaccine