Home /News /trend /

viral video : வாவ்! சாக்லேட் கலவையில் பாயும் புலியின் சிலையை வடிவமைத்த சமையல் கலைஞர்…

viral video : வாவ்! சாக்லேட் கலவையில் பாயும் புலியின் சிலையை வடிவமைத்த சமையல் கலைஞர்…

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

viral video : சாக்கலேட்டுகளை பொருத்தவரையிலும் பொதுவாக வண்ணங்கள், அதன் ஃபிளேவர் மற்றும் சுவை மற்றும் விலை, இவற்றை பார்த்துதான் நாம் வாங்கியிருப்போம்.

பொதுவாக கேக் வாங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவமைப்பில் வாங்குவார்கள். பலரும் தங்கள் பெயரும், வாழ்த்துக்களும் இடம்பெற்றால் போதுமானது என்பார்கள். ஆனால், ஒரு சிலர் பைக் வடிவ கேக், கார் வடிவ கேக், குழந்தைகளுக்கு பிடித்தமான பொம்மை வடிவங்களில் கேக் என வித விதமாக ஆர்டர் செய்வார்கள்.

இவ்வளவு ஏன்? அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் சமயங்களில் அவர்களது கட்சி சின்னங்களின் வடிவத்தில் ராட்சத கேக் வெட்டி அசத்துவார்கள். இப்படி டிசைன், டிசைனாக கேக் பார்த்த நாம், சாக்லேட்டுகளில் அப்படி கேட்டு வாங்கியிருக்க மாட்டோம்.

சாக்லேட்டுகளை பொருத்தவரையிலும் பொதுவாக வண்ணங்கள், அதன் ஃபிளேவர் மற்றும் சுவை மற்றும் விலை, இவற்றை பார்த்துதான் நாம் வாங்கியிருப்போம். ஆனால், சாக்லேட் கலவையில் இரண்டு புலிகளின் சிலைகளை செய்து அசத்தியிருக்கிறார் சீனாவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் அமௌரி குய்ச்சான். ஒரு புலி பாயும் வடிவத்திலும், மற்றொரு புலி அதனுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போலவும் இவர் வடிவமைப்பு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ரூ.2.50க்கு இட்லி, ரூ.5க்கு தோசை - அசத்தும் அம்மா கடை...

லூனார் என்று சொல்லப்படும் சீன புத்தாண்டுக்கான ஸ்பெஷலாக சாக்கலேட் புலியை டிசைன் செய்துள்ளார் அவர். ஸ்விஸ் - பிரெஞ்ச் முறையிலான பேஸ்ட்ரி சமையலில் வல்லுநராக திகழும் இவர், இதுபோன்று புதுமையான விஷயங்களை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு பேஸ்ட்ரி மற்றும் சாக்கலேட் கலவைகளில் ஏராளமான டிசைன்களை அமௌரி செய்துள்ளார்.

புலியின் முகம், காது, வால், பாதம் என அத்தனை பாகங்களையும் இவர் டிசைன் செய்திருக்கிற விதம், நிஜத்தில் புலியை பார்ப்பது போலவே இருக்கிறது. புலி சிலையை சாக்லேட்டில் செய்த பிறகு, எடிபில் பெயிண்ட் பயன்படுத்தி அதற்கு வண்ணம் அடித்துள்ளார். குறிப்பாக, புலியின் முதுகில் வரையப்பட்டுள்ள கோடுகள், அதன் பின்பகுதியில் இருந்து வளைந்து நிற்கும் வால் போன்றவை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள் : ரயில் தண்டவாளங்களை கடக்க முடியாமல் தவித்த யானைகள் - துரிதமாக வழி ஏற்படுத்திக் கொடுத்த ரயில்வேதுறை

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை “சாக்கலேட் டைகர்! ஹாப்பி லூனார் நியூ இயர்’’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளார் அமௌரி. வீடியோவை காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும். அதனுடன் ஒரு டைகர் எமோஜியை சேர்த்து பதிவிட்டுள்ளார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Amaury Guichon (@amauryguichon)






 

 

நெட்டிசன்கள் பலரை இது அதிவேகமாக கவர்ந்து வருகிறது. சுமார் 5.7 லட்சம் பேர் இதற்கு லைக் செய்துள்ளனர். புலிகளின் சிலையை மிக நேர்த்தியாக, தத்ரூபமாக அமௌரி வடிவமைப்பு செய்திருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. புலி சாக்கலேட் சாப்பிட விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.



உங்கள் படைப்பை பார்த்து நான் மெய்மறந்துவிட்டேன் என்று ஒரு பயனாளரும், இது ஒரு மாஸ்டர் பீஸ் என்று மற்றொரு பயனாளரும் அமௌரியை பாராட்டி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chocolate, Trending, Viral Video

அடுத்த செய்தி