17 வருடங்களுக்குப் பின் மீண்டும் மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய சாயா சிங் - வீடியோ

நடிகை சாயா சிங் வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

17 வருடங்களுக்குப் பின் மீண்டும் மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய சாயா சிங் - வீடியோ
சாயா சிங்
  • Share this:
மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக கொடுத்துள்ளார் நடிகை சாயா சிங்.

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ், சாயா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் திருடா திருடி. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக மன்மதராசா பாடலைக் கூறலாம்.

தினா இசை, ஃபாஸ்ட் பீட் நடனம் என இளைஞர்களைக் கவர்ந்த இந்தப் பாடலுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சிவசங்கர் மாஸ்டருடன் மீண்டும் நடனமாடியுள்ளார் சாயா சிங்.


அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகை சாயா சிங், அனைவருக்கும் என்னுடைய பிறந்தநாள் விருந்தாக உங்களுக்கு பிடித்தமான திருடா திருடி படத்தின் பாடல் என்றும் ஒரு வருடத்துக்கு முன்னர் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது எடுத்த வீடியோ என்றும் பதிவிட்டுள்ளார்.

சீரியல் நடிகர் கிருஷ்ணாவை 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சாயா சிங், தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, விஷாலின் ஆக்‌ஷன், அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading