லைட்டப் போடாத! லைட்டப் போடாத! கம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட குட்டி யானை..

குட்டி யானை

குட்டி யானைகள் செய்யும் குறும்புத் தன வீடியோக்களும், புகைப்படங்களும் எப்போதும் இணையத்தில் வைரலாகி இணையவாசிகள் கவனம் பெரும். அவ்விதம் தாய்லாந்து குட்டி யானை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • Share this:
  தாய்லாந்து நாட்டில் யானை குட்டி ஒன்று தோட்டத்தில் கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதன் மீது டார்ச் லைட் அடித்ததால் உடனே அருகில் இருந்த போஸ்டின் பின் சென்று ஒளிந்து கொண்டுள்ளது.

  இந்த ஒற்றை புகைப்படம் அனைவரின் மனதையும் வென்று வருகின்றது. பலரும் யானையின் செயலை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.  இவ்விதம் கடந்த ஜனவரி மாதம் யானை ஒன்று பசிக்காக மாம்பழம் திருடிய செயல் இணையத்தில் வைரலானது.  தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சாம்பியா நாட்டில் உள்ளது தெற்கு லுங்வா தேசிய பூங்கா. இங்கிருந்த யானை ஒன்று கொஞ்சமா பசிக்குதே என்று பக்கத்து கார்டனில் எட்டிப் பார்க்க. பசி மயக்கத்தில் மரம் முழுவதும் மாம்பழம் போல் கண்களுக்கு தெரிய குதிச்சிருடா கைப்புள்ள என்பன போல் அருகில் இருந்த 5-அடி சுவரில் கவனமாக ஏறி மாம்பழங்களைத் திருட சென்றுள்ளது.இதனை அருகில் லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

  இதற்கு முன்னதாக, குட்டி யானை ஒன்று சிறுவர்களைப் போல் சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: