• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சண்டிகர் டூ சென்னை - 60 வயது நண்பர்களின் பயண அனுபவம்!

சண்டிகர் டூ சென்னை - 60 வயது நண்பர்களின் பயண அனுபவம்!

60 வயது நண்பர்களின் பயண அனுபவம்

60 வயது நண்பர்களின் பயண அனுபவம்

வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பு, சுகாதாரப் பிரச்சனை, அச்சுறுத்தும் கொரோனா என ஒவ்வொருவரின் வாழ்க்கையை கடந்த ஓராண்டில் தலைகீழாக மாறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
60 வயதைக் கடந்த 3 நண்பர்கள் சண்டிகரில் இருந்து சென்னை வரை சுமார் 40 நாட்களில் 4500 கிலோ மீட்டர் சாலை வழியாக பயணம் செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பு, சுகாதாரப் பிரச்சனை, அச்சுறுத்தும் கொரோனா என ஒவ்வொருவரின் வாழ்க்கையை கடந்த ஓராண்டில் தலைகீழாக மாறியுள்ளது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வர பலரும் முயற்சி செய்துவரும் நிலையில் அல்லது புதிய வாழ்வாதாரத்தை நோக்கிய பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது அடுத்த கொரோனா அலை பரவத் தொடங்கியுள்ளது. இது மேலும் மக்களுக்கு அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு, நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. புதிய பயணங்கள் எப்போதும் நமக்கு புத்துணர்ச்சி மற்றும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். கடுமையான வேலைபளு இருப்பவர்கள் பலரும் வாரம் அல்லது மாதம் ஒருமுறை நீண்டதூரம் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு பல சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டிருந்தாலும், பலரும் சாலை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சண்டிகர் முதல் சென்னை வரையில் 60 வயதைச் சேர்ந்த 3 பேர் சாலை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள்.

4500 கிலோமீட்டர் தொலைவிலான இந்த தூரத்தை சுமார் 40 நாட்களில் கடந்துள்ளனர். பல்வேறு நகரங்கள் வழியாக பயணித்த அவர்கள், கடைசியாக சென்னை வழியாக அந்தமான் சென்று தற்போது புதுச்சேரி வந்தடைந்துள்ளனர். ராபின் நாகாய், அவரது மனைவி அமிர்தா மற்றும் தோழி உஷா ஹூடா ஆகிய மூன்று பேரும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். சண்டிகரில் புறப்பட்ட அவர்கள், உதய்பூர், மும்பை, கணபதி பூலே, பன்ஜிம், ஹம்பி, பெங்களூரு வழியாக சென்னை அடைந்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமான் சென்ற அவர்கள் தற்போது புதுச்சேரியில் உள்ளனர்.

Also read... வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா - அக்சர் படேல் நெகிழ்ச்சி!

தங்களின் பயண அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட ராபின்நாயக், வழியில் பல்வேறு புதிய அனுபவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். நீண்ட தூரம் பயணம் செல்லும்போது எதிர்பாராத நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். தாங்களுக்கும் பல புதிய அனுபவங்கள் கிடைத்ததாகவும், பல இடங்களில் கொரோனா லாக்டவுன் பிரச்சனைகளை கூட எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவயது முதல் தாங்கள் மூவரும் நல்ல நண்பர்கள் என கூறிய ராபின் நாயக், பயணம் செய்வது மிகவும் பிடித்தமான விஷயம் எனக் கூறியுள்ளார். சிறுவயதில் இருந்து தாங்கள் மூவரும் இணைந்து பல பைத்தியக்காரதனமான விஷயங்களை செய்திருப்பதாகவும், அவை நல்ல நினைவுகளாக இன்றும் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அந்தமானில் வாகனம் ஓட்டியது புதிய அனுபவமாக இருந்ததாகவும் ராபின் நாயக் கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: