சாப்பிடுவதற்காக ஸ்லேட் பென்சிலை விற்பனை செய்யும் அமேசான்... இப்படியெல்லாமா விப்பாங்க!

மாதிரி படம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக திகழும் மற்றொரு இ-காமர்ஸ் தளம் என்றால் அது அமேசான் நிறுவனம் .

  • Last Updated :
  • Share this:
பயனுள்ள மற்றும் அன்றாட விஷயங்களை விற்பனை செய்வதைத் தவிர்த்துவிட்டு, ஈ-காமர்ஸ் தளமான அமேசான் உண்மையில் அதன் இணையதளத்தில் வினோதமான மற்றும் வித்தியாசமான விஷயங்களின் நீண்ட விற்பனை பட்டியலைக் கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஸ்லேட் பென்சில் ஃபார் ஈட்டிங் என்று ஒரு விற்பனையை அறிவித்துள்ளது. இதை கண்ட இணையவாசிகள் அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். ஸ்லேட் பென்சிலை சாப்பிடுவதற்காகவா விற்பனை செய்வார்கள்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். பொதுவாக சிலேட்டு பென்சிலை சாப்பிடுவது பலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவை சுண்ணாம்பு கலவையால் செய்யப்படுவதால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 80 மற்றும் 90களில் ஸ்லேட் பென்சில் குழந்தை பருவ பள்ளிப்படிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள்.

குழந்தையாக இருந்தபோது உங்களில் பலர் சுண்ணாம்பு சாப்பிட்டிருக்கலாம் அல்லது உங்கள் சக வகுப்பு தோழர்கள் பள்ளியில் ஸ்லேட் பென்சில்களை சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் சாப்பிடுவதற்காக ஸ்லேட் பென்சிலின் பிரத்தியேக விற்பனையை காட்டாயம் பார்த்திருக்க முடியாது. பொதுவாக, சுண்ணாம்பை மெல்லும் கட்டாய பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு பிகா எனப்படும் உணவுக் கோளாறு இருக்கலாம். சுண்ணாம்பு உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்காது என்றாலும், அமேசான் ஒரு உணவுக் கோளாறு வகையை வைத்து பணமாக்குவது மற்றும் ஊட்டச்சத்து இல்லாத பொருட்களை உட்கொள்ள மக்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களால் மோசமான பெயரை எடுத்து வருகிறது.

Also read... 50 ஆண்டுகளுக்கு முன்பு மலர்ந்த காதல்... 82 வயது ராஜஸ்தான் நபரை மீண்டும் அணுகிய ஆஸ்திரேலிய பெண்!

மேலும் அமேசான் நிறுவனம் தனது விற்பனை பக்கத்தில் சாக் பென்சில் விற்பனையை பற்றி குறிப்பிட்டுள்ளதாவது. " நேச்சுரல் வைட் லைம்ஸ்டோன் ஸ்லேட் பென்சில்களின் நேச்சுரல் சாக் பென்சில் எழுத அல்லது சாப்பிட' என்ற ஒரு தலைப்புடன் இணையதளத்தில் பல பட்டியல்களைக் சேர்த்துள்ளது. மேலும் சாக் பென்சிலுக்கு நிறுவனம் கொடுத்துள்ள விளக்கம் பின்வருமாறு, '' ஒரு அட்டைப்பெட்டியில் 100 சாக் பென்சில்கள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது. குறிப்பு: இந்த சாக் பென்சில்கள் மிகவும் பிரமாதமானவை. மேலும் அவற்றில் சில டெலிவரி செய்யப்படும் போது உடைந்திருக்கலாம். ஆனால் பயன்படுத்துவதற்கு நல்லதாக இருக்கும். எனவே தயவுசெய்து புகார் செய்ய வேண்டாம். அவற்றின் சில நல்ல துண்டுகள் எந்தவொரு சாக் போர்டுகளிலும் பெரிய அளவில் எழுதுகின்றன, சாப்பிடுவதற்கும் சிறந்தது" என்று விளக்கமும் நிறுவனம் கொடுத்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக திகழும் மற்றொரு இ-காமர்ஸ் தளம் என்றால் அது அமேசான் நிறுவனம் தான். மின் சாதனங்கள், ஆடை, ஆபரணங்கள், மொபைல், லேப்டாப், டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து வகைகளும் இந்த தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், குழந்தைகளுக்கான எஸ்.எஸ்.கே.ஆர் ஸ்லேட் பென்சில் முதல் லைம் ஸ்டோன் பென்சில் வகைகள் என பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது வேடிக்கையாக இருப்பதாகவும், மற்றும் தவறான நோக்கத்தை ஊக்குவிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: