மருமகளைத் திருமணம் செய்து கொண்ட மாமனார்

மருமகளைத் திருமணம் செய்து கொண்ட மாமனார்
மாதிரி படம்
  • Share this:
சத்தீஸ்கரில் கணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட அரிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம்பெண் கணவனை இழந்து தனிமையில் இருந்துள்ளார். ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் அந்த இளம்பெண்ணை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆர்த்தி சிங்கின் கணவர் கவுதம் சி்ங் 2 வருடங்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை அடுத்து அவர் தனிமையில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவரது மாமனார் தனது மருமகளை அன்புடன் கணிவாக கவனித்து வந்ததால் அவரையே திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மருமணத்திற்கு சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினர் திருமணத்திற்கான ஏற்பாடு செய்துள்ளனர்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading