Home /News /trend /

வாவ்!! நீருக்கு அடியில் பிரபல சமையற் கலைஞர் செய்த காரியம்... வைரல் வீடியோ!

வாவ்!! நீருக்கு அடியில் பிரபல சமையற் கலைஞர் செய்த காரியம்... வைரல் வீடியோ!

Trending

Trending

Burak Özdemir | பிரபல சமையற்கலைஞர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் நின்ற படி வெள்ளரிக்காயை மிகவும் சரியான அளவில் துண்டுகளாக வெட்டும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியாவை பொறுத்தவரை சமையல் மற்றும் சாப்பாடு தொடர்பான வீடியோக்கள் என்றால் தாறுமாறு வைரலாவது வழக்கமாக உள்ளது. விதவிதமான உணவு பதார்தங்களை, வித்தியாசமான முறையில் சமைக்கவும், பரிமாறவும் செய்யும் சமையல் கலைஞர்களின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் கொட்டிக்கிடக்கின்றனர். சமீபகாலமாகவே மும்பையைச் சேர்ந்த பாதாம் பால் விற்பனையாளர், மசாலா முதல் பீட்சா தோசை வரை சைக்கிளில் விற்பனை செய்யும் நபர் என வித்தியாசமான நபர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.

தற்போது தண்ணீருக்குள் நின்றபடி, ஒரு முழு வெள்ளரிக்காயை துல்லியமான அளவு மற்றும் வேகத்தில் வெட்டிய பிரபல சமையற்கலைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. டிக்-டாக் மூலம் பிரபலமான சமையல் கலைஞர் ஒஸ்டெமிர் புராக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்கு அடியில் நின்று வெள்ளரிக்காய் நறுக்கும் வீடியோவை பதிவிட்டு, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், துருக்கி சமையற் கலைஞரான சிஎன்இசட் புரோக் என அழைக்கப்படும் ஓஸ்டெமிர் புராக்  (CZN Burak) தண்ணீருக்கு அடியில் வெள்ளரிகளை நறுக்குகிறார். சமையல் கலைஞரான ஒஸ்டெமிர் புராக், தண்ணீருக்குள் அமர்ந்து தனது மடியில் ஒரு வெட்டு பலகையை வைத்து, தனது வழக்கமாக சுறுசுறுப்புடன் முழு வெள்ளரிக்காயை துண்டு, துண்டாக ஒரே அளவில் அசத்தலாக வெட்டுகிறார்.

கேமராவைப் பார்த்துக் கொண்டு முழுப் பணியையும் முடித்துள்ளார். அப்போது அவருடைய முகத்தில் தெரியும் புன்னகை அவரது பாலோயர்களைக் கவர்ந்திழுந்துள்ளது. நிச்சயமாக உங்களை ஈர்க்கும் படி இருக்கும். பிரபல சமையல் கலைஞரின் இந்த வீடியோவை இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இன்ஸ்டாகிராமில் கண்டுகளித்துள்ளனர்.



 




View this post on Instagram





 

A post shared by Burak Özdemir (@cznburak)






துருக்கி சமையற் கலைஞரான புராக் ஆஸ்டெமிருக்கு இது முதல் முறை கிடையாது. பல வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறார். சிரித்தபடியே உணவை சமைப்பதில் புராக் ஓஸ்டெமிர் மிகவும் கைதேர்ந்தவர். தற்போது பிரபல நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

Also Read : பெண் கர்ப்பம்... ஏலியன் காரணமா? பெண்டகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புராக் வெளியிட்ட வீடியோ ஒன்றும் உலக அளவில் பேமஸ் ஆனது. அதில் வானத்தில் பறந்த படியே வெங்காயத்தை நறுக்கிய வீடியோவை பதிவிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட உக்ரைன் - ரஷ்யா போருக்கு தனது வருத்தத்தை தெரிவிக்கும் விதமாக புன்னகை மன்னன் புராக், சோகமான முகத்துடன் சமைக்கும் வீடியோ வெளியாகி இணையத்தையே கலக்கியது.



 




View this post on Instagram





 

A post shared by Burak Özdemir (@cznburak)






அந்த வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி, உக்ரைனில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையும் புராக் அனுப்பி வைத்தார். இதனால் அவரது வீடியோ மட்டுமின்றி மனித நேயம் மிக்க செயலும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி