ஆளில்லா நடைமேடையில் இளம்பெண்ணுக்கு அத்துமீறி முத்தம்! சிசிடிவியில் சிக்கிய வாலிபர்

ஆளில்லா நடைமேடையில் இளம்பெண்ணுக்கு அத்துமீறி முத்தம்! சிசிடிவியில் சிக்கிய வாலிபர்
  • Share this:
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பல பாலியல் வன்முறை வழக்குகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில், மும்பை ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் மாதுங்கா ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் ஆள்நடமாட்டமில்லாத நேரத்தில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த வெள்ளை சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் அவரிடம் அத்துமீறி முத்தமிட்டு அங்கிருந்து ஒடி விடுகிறார்.

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. கேமிராவில் பதிவாகி உள்ள நபர் இதுப்போன்று பல முறை பெண்களிடம் அத்துமீறி உள்ளார். பெண்களிடம் அத்துமீறி சில்மிஷம் செய்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பி விடுகிறார். இதுப்போன்ற காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் சிக்கி உள்ளது.


சிசிடிவி கேமிராவில் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பல திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் இருந்தபோதும் முறையாக எந்த பெண்ணும் புகார் அளிக்க முன்வராததால் மும்பை போலீசார் அந்த நபர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading