Home /News /trend /

டெலிவரி பாயின் ஆணுறுப்பை வெடுக்கென கடித்த நாய்.. லிஃப்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

டெலிவரி பாயின் ஆணுறுப்பை வெடுக்கென கடித்த நாய்.. லிஃப்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

மும்பையில் டெலிவரி ஊழியரை லிஃப்டில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்டு வளர்ப்பு நாய் அந்தரங்க பகுதியில் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
மும்பையில் டெலிவரி ஊழியரை லிஃப்டில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்டு வளர்ப்பு நாய் அந்தரங்க பகுதியில் கடித்துள்ளது. அந்த தருணத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவ்வப்போது குடியிருப்புகளில் வளர்ப்பு நாய் அருகில் இருப்பவரைக் கடித்து வைக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த நபரை வளர்ப்பு நாய் கடித்து விட்டது. மேலும் சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் லிஃப்டில் பயணம் செய்தபோது, அதே லிஃப்டில் பெண் அழைத்து வந்த நாய் அந்த சிறுவனை லேசாக கடித்து விட்டது.

லிஃப்டுகளில் அதிகரிக்கும் பிரச்சனை:

இடவசதி மிகுந்த பொது வெளிகளில் நாம் நாயை எதிர்கொள்ளும்போது அதனிடம் இருந்து விலகிச் சென்று விடுகிறோம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள குறுகிய இடவசதி கொண்ட லிஃப்டுகளில் செல்லும்போது நாயிடம் இருந்து விலகுவதற்கான சாத்தியங்கள் இருப்பதில்லை.

பான்வல் பகுதியில் உள்ள இந்தியாபுல்ஸ் க்ரீன்ஸ் மேரிகோல்டு பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. சொமேட்டோ நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவர், அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டில் ஏறுகிறார்.

அப்போது லிஃப்ட் உள்ளே ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார். அந்த நாய் சீறும்போது உரிமையாளர் அதன் கயிற்றை இழுத்தவுடன் பின் வாங்குகிறது. இதனால், பீதியைக் குறைத்துக் கொண்டு மீண்டும் லிஃப்ட் உள்ளே சென்ற அந்த இளைஞரின் அந்தரங்க பகுதியில் நாய் கடித்துவிட்டது.



மருத்துவமனையில் சிகிச்சை:

நாய் கடித்து ரத்தம் சொட்ட, சொட்ட அந்த நபர் வலியா துடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சின்ன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், தற்போது ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.



Also Read : 29 பேரா.. சங்கடமா இருக்காது?.. கின்னஸ் சாதனைக்காக அரங்கேறிய சம்பவம்!

இவரது மருத்துவச் செலவுகளை நாயின் உரிமையாளர் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. என்ன இருப்பினும் நாம் வளர்க்கும் நாயால் பிறருக்கு வலி, வேதனை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து நாய் உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Janvi
First published:

Tags: Delivery Boys, Dog, Pet Animal

அடுத்த செய்தி