ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மீண்டும் 2ஜி விவகாரம்? 2011 செய்தியை காப்பி பேஸ்ட் செய்த ஊடகங்கள்..

மீண்டும் 2ஜி விவகாரம்? 2011 செய்தியை காப்பி பேஸ்ட் செய்த ஊடகங்கள்..

ஆ.ராசா

ஆ.ராசா

2011ல் வெளியான செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரமாக வெளியிட்ட நிலையில், அதனை உண்மையென நம்பி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2011ல் 2ஜி தொடர்பாக வெளியான செய்தியை தவறுதலாக புது செய்தி என எண்ணி, பல்வேறு ஆங்கில ஊடகங்கள் இன்று மீண்டும் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  சமீபத்தில் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி, ஓரியே ப்ரோமஷனுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் 2011ல் ஓரியோ அறிமுகமானது 2011ல் இந்தியா உலக கோப்பையை வென்றது. நான் 2022ல் மீண்டும் ஓரியோ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறேன். அப்போ? என கேள்வி எழுப்பினார் அதற்கு இந்தியா மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என ஒருவர் பதிலளிப்பார். மேலும் வரலாற்றை படைக்க பழைய வரலாற்றை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.

  அதே பாணியில் இன்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள்,  இந்திய அணி  ஒருநாள் உலக கோப்பையை  வென்றதை செய்தியாக வெளியிட்ட  எப்ரல் 3, 2011ஆம் ஆண்டின் முதல் பக்கத்தை இன்றறைய செய்தித்தாளில் முதல் பக்கமாக வைத்தது, மேலும் அது தவறுதலாக செய்யவில்லை, ஓரியோவின் 2011ஐ மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என விளக்கம் அளித்தது.

  இந்நிலையில், அந்த முதல் பக்கத்தில் 2011ஆம் ஆண்டு திமுகவின் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த செய்தி இடம்பெற்றிருந்தது. இணைய தளத்தில் வெளியான இ-பேப்பரிலும் இதேபோல் இருந்தது.

  இதையும் வாசிக்க: அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு? மோடியை சந்திக்கிறாரா ஓ.பி.எஸ்? - வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்!

  ஆங்கிலத்தில் உள்ள பல்வேறு செய்தி நிறுவனங்கள், நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்தியை ஆட்டோமேடிக்காக வெளியிடும் செயலியை பயன்படுத்துவதால் தவறுதலாக பதிவிடப்பட்டது.

  பல்வேறு செய்தி ஊடகங்கள் இதன் உண்மைதன்மையை ஆராயாமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து மீண்டும் வெளியிட்டுள்ளனர். இது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை தொடர்ந்து ஒருசில ஊடகங்கள் சுதாரித்துகொண்டு இச்செய்தியை நீக்கின.

  இதனையடுத்து, IANS இந்தியா நிறுவனம், அந்த பதிவு தவறுதலாக பதிவிடப்பட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ட்வீட் செய்துள்ளது.

  இன்றைய செய்தி நாளைய வரலாறு எனும் முக்கியத்துவத்தை உணராமல் பல்வேறு செய்தி நிறுவனங்கள் இதுபோன்ற தவறுகளை செய்து வருவதாக சமூகவலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: 2G case, A Raja, Trending News